Tuesday 28 October 2014

ANGER...10

ஒரு முறை புத்தர், பிரசங்கம் செய்து கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த ஒருவன், புத்தரை தொடர்ந்து திட்டிக் கொண்டேயிருந்தான். அதைக்கேட்ட புத்தர், அமைதியாக சிரித்துக் கொண்டிருந்தார். அவரது சீடனுக்கு கோபம் வந்து விட்டது. "சுவாமி, அவன் அவ்வளவு திட்டுகிறான்; நீங்களோ சிரிக்கின்றீர்களே,' என்று சீடன் சொன்னதற்கு, "ஒரு பொருளை ஒருவர் கொடுக்கும் போது, நாம் வாங்காவிட்டால், அது அவருக்கே சேரும். அதைப்போல, அவன் பேசும் வார்த்தைகளும் அவனுக்கே சேரும்,' என்று புத்தர் விளக்கினார்.

1. எவன் ஒருவன் தனது கோபத்தைத் தடுத்துக் கொள்கிறானோ, அவன் தன்னுடைய பெரிய எதிரியை வெற்றிகொண்டவன் ஆகிறான்.
-லத்தீன்


2. கோபம் கொப்பளிக்கும் அந்த ஒரு கணத்தில், நீ பொறுமை காத்தால் நூறு நாள் துன்பத்திலிருந்து தப்பித்து விடுவாய்.
-சீனம்


3. கோபத்தை வெளிக்காட்டுவது, குளவிக் கூட்டின் மீது கல்லெறிவதற்கு ஒப்பானது.
-மலபார்

4. கோபத்தை வெற்றி கொள்வதற்கு ஒரே வழி, அதைத் தாமதப்படுத்துவது.
-செனேகா


5. ஒரு கண நேரத்தின் கோபத்தை அடக்கி வைப்பவன், ஒரு நாளையத் துயரத்தை அடக்கியவனாவான்.

-முதுமொழி




. சினத்தை ஒழிக்க வேண்டும். சினம் ஒழிய மனம் அடையும் நிலைதான் பொறுமை.

-வேதாத்திரி மகரிஷி

No comments:

Post a Comment