Sunday, 18 January 2015

உணவுப் பழக்கம்......4




உணவில் மூன்று வகை 
அறிஞர்கள் சிலர் ஒரு கருத்தைச் சொல்கிறார்கள்.


அதாவது இயற்கையில் விளையும் உணவுப் பொருட்களை மூன்றுவிதமாகப் பிரிக்கிறார்கள்.


முதலாவது மரத்தில் விளையும் காய் கனிகள்.


இரண்டாவது நிலமட்டத்தில் விளையும் தானியங்கள்.


மூன்றாவது நிலத்துக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகள்.


இதில் மூன்றாவதான கிழங்கு வகைகள் பன்றிமுதலான விலங்குகளுக்கும் உயிரினங்களுக்குமானது.அவை நிலத்தைப் பறித்துக் கிழங்குகளை உண்டு வாழும் குணமுள்ளவை.


இரண்டாவதான நிலமட்டத்தில் விளையும் தானிய வகைகள் பறவைகளுக்கும் கால்நடைகளுக்குமானவை. பயிரின் முழுப்பகுதிகளை கால்நடைகளும் தானியத்தைப் பறவைகளும் உண்டு வாழக்கூடியவை.


முதலாவதான உயர்ந்த மரங்களில் விளையும் காய் கனிகள்தான் மனிதர்களான நமது உணவு வகையாம்.


ஆராய்ந்து பார்த்தால் கிழங்கு வகைகளை தவிர்க்கும்படி சொல்லப்படுவதும் தானிய உணவைவிடக் காய் கனிகளை அதிகம் உண்ணச் சொல்லப்படுவதும் கிட்டத்தட்டப் பொருத்தமாகத்தான் படுகிறது!


தவிர நமது மூதாதையர்களான ஆதி மனிதர்கள் மரங்களில் வாழ்ந்தவர்கள்தானே! அதுவும் ஏற்புடையதாகத்தான் தெரிகிறது!

No comments:

Post a Comment