Sunday 27 February 2022

தேவநேயப் பாவாணர் - 3


 மரம்

தேவநேய பாவாணரிடம் ஒருவர் கேட்டார் : " நீங்கள் தமிழில் எல்லா சொல்லும் பொருள் குறித்ததுதான் என்கிறரீர்களே...... அப்படியானால் மரமென்ற சொல்லுக்கு பொருள் என்ன? "

" சொல்கிறேன்... கொஞ்ச நேரம் அப்படியே அமரும் " என்கிறார் பாவாணர்.

நேரம் போய்க்கொண்டே இருந்தது. பாவாணர்  ஏதும் விளக்கம் சொல்வதாக இல்லை. வந்தவரும்  அப்படியே அமர்ந்திருந்தார்.

பாவாணர் எதோ எழுதிக்கொண்டே இருந்தார். நேரம் போய்க்கொண்டே இருந்தது.  வந்தவரோ பொறுமையிழந்து " ஏன் பதிலே சொல்லவில்லை.. எவ்வளவு நேரம் இப்படி அமர்ந்திருப்பது? " எனக் கேட்டார். 

பாவாணர் அவரைத் தன அருகில் வருமாறுக் கூப்பிட்டார்.  அதற்கு அவர் 

" என்னால் வர முடியவில்லை " என்றார்.

" ஏன்? " எனக் கேட்டார் பாவாணர். 

" கால் மரத்துப் போச்சு. நடக்க முடியவில்லை " என்றார் அவர்.

அப்போது பாவாணர் " நீங்கள் கேட்டீர்களே..மரத்திற்கான பொருள் - உயிர் இருக்கும், வளர்ச்சி இருக்கும். ஆனால் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தானாக இடம் பெயர்ந்து செல்ல முடியாது. இப்படிப்பட்ட இயல்புடைய பொருளுக்கு மரம் எனப் பெயர் " என்றார் பாவாணர்.

இதுதான் பாவாணரின் மொழியியல் திறன்!


No comments:

Post a Comment