Thursday 24 February 2022

HAPPY HARMONES ( ஹேப்பி ஹார்மோன் )

 

மகிழ்ச்சி தரக்கூடிய ஹேப்பி ஹார்மோன்களை அதிகளவில் சுரக்கவைப்பது எப்படி? 

  ( FROM VIKATAN )


Happy HormoneNews
Happy Hormone

டோபமைன், செரட்டோனின், ஆக்ஸிடோசின் மற்றும் எண்டார்பின் ஆகியவைதான் ஹேப்பி ஹார்மோன்ஸ். இவற்றை நமது அன்றாட வாழ்க்கையில் செய்யும் சில குறிப்பிட்ட செயல்கள் மூலம் எப்படித் தூண்டலாம்.


டயட்டீஷியன் சங்கீதா

"நமது உடலில் உள்ள ஹார்மோன்கள் எல்லாம் வெவ்வேறு சுரப்பிகள் மூலம் பெறப்படும் ரசாயனங்கள்தான். இவை நமது ரத்தத்தின் மூலமே உடல் முழுவதும் பரவுகின்றன. இவற்றின் முக்கியப் பணி நமது உடல் நிலையையும் மனநிலையையும் சீராக வைத்திருப்பதுதான். இவற்றில் சில ஹார்மோன்கள் நமக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தருகின்றன. அதனால் அவற்றை மட்டும் ’ஹேப்பி ஹார்மோன்ஸ்' அதாவது ‘மகிழ்ச்சி தருகிற நாளமில்லா சுரப்பிகள்’ என்று அழைக்கிறோம். டோபமைன், செரட்டோனின், ஆக்ஸிடோசின் மற்றும் எண்டார்பின் ஆகியவைதான் ஹேப்பி ஹார்மோன்ஸ். இவற்றை நமது அன்றாட வாழ்க்கையில் செய்யும் சில குறிப்பிட்ட செயல்கள் மூலம் எப்படித் தூண்டலாம் என்பதைப்பற்றி விரிவாகச் சொல்கிறேன்.

ADVERTISEMENT

டோபமைன் சுரக்க வெற்றியைக் கொண்டாடுங்க...

happy hormone
happy hormone
இதமான உணர்வுகளுக்கும், நல்ல நினைவாற்றலுக்கும், கற்றல் திறனுக்கும் டோபமைன் ஹார்மோன்தான் நமக்கு உதவி செய்கிறது. நமது மனநிலையை சீராக வைத்துக்கொள்வதற்கு டோபமைன் ஒரு முக்கியக் காரணியாகச் செயல்படுகிறது. நமக்குப் பிடித்த ஒரு செயலை நல்லபடியாகச் செய்து முடிக்கும்போதும், பிடித்த உணவுகளைச் சாப்பிடும்போதும், வெற்றிகளைக் கொண்டாடும்போதும் டோபமைன் அதிக அளவில் சுரக்கிறது.

happy hormone

நமது தூக்கத்தையும் செரிமானத்தன்மையையும் கட்டுப்படுத்த உதவுகிறது செரட்டோனின். நாம் எவ்வளவு சாப்பிட முடியும், எவ்வளவு நேரம் தூங்க முடியும், ஒரு வேலையை எந்த அளவிற்குச் செய்ய முடியும் என்பனவற்றை இந்த ஹார்மோனே தீர்மானிக்கும். இதை அதிக அளவில் சுரக்கவைக்க உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்யலாம். சூரிய ஒளி நம் மேல்படுகிற இடங்களில் இருந்தாலும் செரட்டோனின் அதிக அளவில் சுரக்கும். 

happy hormone

இந்த ஹார்மோனுக்கு காதல் ஹார்மோன் என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. ஆக்ஸிடோசின் ஹார்மோன் குழந்தை பிறப்பதற்கும், பாலூட்டுவதற்கும் உறவில் ஓர் இணக்கத்தை ஏற்படுத்துவற்கும் அவசியமான ஒன்று. இது நாம் அடுத்தவரைக் கட்டியணைக்கும் போதும், செல்லப்பிராணிகளுடன் விளையாடும்போதும், அடுத்தவரைத் தொடும்போதும் அதிகம் சுரக்கிறது. ஓர் உறவில் நீடித்திருக்க இந்த ஆக்ஸிடோசின் ஹார்மோனின் உதவி நிச்சயம் தேவை

 

எண்டார்பின் அதிகம் சுரக்க வாய்விட்டுச் சிரிங்க...


happy hormone
happy hormone



இதற்கு வலி நிவாரணி ஹார்மோன் என்ற பெயரும் இருக்கிறது. நமக்கு மனஅழுத்தம் இருந்தாலோ, உடலில் ஏதாவது வலி இருந்தாலோ எண்டார்பின் அதிகமாகச் சுரக்கும். சில வலிகளை நமக்குப் பிடித்துப்போவதற்கு காரணம், அந்த நேரங்களில் இந்த ஹார்மோன் சுரப்பதால்தான். உடற்பயிற்சி செய்யும்போதும் வாய்விட்டுச் சிரிக்கும்போதும் இது அதிகளவில் சுரக்கும்.

மேலே சொன்ன வழிமுறைகளுடன், ஹேப்பி ஹார்மோன்களை அதிகம் சுரக்க வைக்க, நமது உணவுப் பழக்கத்திலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அதிக புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் குறைந்த கொழுப்பு நிறைந்த உணவுகளையும் சாப்பாட்டில் சேர்த்துக்கொள்வதோடு, தேவையான அளவு தண்ணீர் குடிப்பதும் அவசியம். ஹேப்பி ஹார்மோன்களை அதிகம் சுரக்க வைப்போம். மகிழ்ச்சியாக இருப்போம்’’ என்கிறார் டயட்டீஷியன் சங்கீதா.



No comments:

Post a Comment