தேவநேயப் பாவாணர்
தேவநேயப் பாவாணர் (Devaneya Pavanar; 7 பெப்ரவரி 1902 – 15 சனவரி 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார்
.`எளிதாக பேசுமொழி தமிழ் பாப்பா - மூச்சிழுக்கும் வல்லொலி யதில் இல்லை பாப்பா பேசு பாப்பா – தமிழ் பேசு பாப்பா...'
பாவாணர் இந்த வரிகளை எழுதி 120 ஆண்டுகள் - அவர் எழுதிய காலத்தைத் தாண்டி இன்றைக்கும் இந்த வரிகள் அவசியமானதாக உள்ளன. தன்னுடைய வாழ்வின் பெரும்பகுதியைத் தமிழ் மொழியியல் ஆராய்ச்சிக்காகச் செலவழித்த தேவநேயப் பாவாணர் அரிய பணிகளை நினைவுகூர்வதன் மூலம், நம் மொழியின் பெருமையையும் வரலாற்றையும் நாம் பயணிக்க வேண்டிய பாதையையும் அறிய முடியும்.
தமிழ் மொழி இன்று வரை தனித்து நிற்பதற்குக் காரணமான செவ்வியல் தன்மைகளை ஆய்வுசெய்த பாவாணர், பிற மொழிச்சொற்களைக் கையாள்வதற்கும் வழிமுறைகளைக் கற்பிக்கிறார். மொழியாக்கம் செய்வது, புதிய சொற்களை உருவாக்குதல் இரண்டும் இயலாதபோது, தமிழ் ஒலிக்கேற்ப திரித்து வழங்குவது முதல் வேர்ச்சொற்களில் தொடங்கி புதிய கலைச் சொற்களை உருவாக்குவது வரை தன் வாழ்வையே தமிழ் மொழி ஆராய்ச்சிக்கு அர்ப்பணித்த பாவாணர் என்கிற தனி மனிதர், மொழி பல்கலைக்கழகமாகக் காட்சியளிக்கிறார். தம் மக்களிடம் அவர் முவைப்பது வெறும் எளிய வேண்டுகோள்தான், `தமிழை மேன்மையடைய செய்ய, தமிழில் பேசுங்கள்.’ன்
No comments:
Post a Comment