உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஒவ்வொன்றும் நம் உடலுக்கு தேவையான எதாவது ஒரு செயலைச் செய்ய உதவுகின்றன. உதாரணமாக விட்டமின் ஏ போன்ற ஊட்டச்சத்துக்கள் கண் ஆரோக்கியத்திற்கு உதவுவதைப் போல பொட்டாசியம் சத்தும் நம் உடலின் முக்கியமான செயல்பாடுகளில் பங்கேற்கிறது.
எப்படி கால்சியம் மற்றும் சோடியம் போன்ற கனிமச் சத்துக்கள் உணவுகளில் காணப்படுகிறதோ அதைப் போல பொட்டாசியமும் சில வகை உணவுகளில் காணப்படுகிறது. இந்த பொட்டாசியத்தை சரியான அளவில் வைத்து இருந்தால் மட்டுமே நம் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். இந்த பொட்டாசியத்தின் முக்கிய பங்கு என்ன இது எந்தெந்த உணவுகளில் காணப்படுகிறது என்பதை நாம் அறிவோம்.
பொட்டாசியம் அடங்கிய உணவுகள்
பழங்கள் மற்றும் காய்கறிகளில் பொட்டாசியம் அதிகளவில் காணப்படுகிறது
வாழைப்பழங்கள்
ஆரஞ்சு
முலாம்பழம்
ஹனி ட்யூ
ஆப்ரிகாட்
திராட்சை பழங்கள்
உலர்ந்த திராட்சை பழங்கள், பேரீச்சம் பழம் இவற்றில் அதிகளவு பொட்டாசியம் காணப்படுகிறது.
காய்கறிகள்
சமைத்த கீரைகள்
சமைத்த பிரக்கோலி
உருளைக்கிழங்கு
சர்க்கரை வள்ளிக் கிழங்கு
மஸ்ரூம்
பட்டாணி
வெள்ளரிக்காய்
சீமை சுரைக்காய்
பூசணிக்காய்கள்
பச்சை இலை காய்கறிகள்
போன்ற காய்கறிகளிலும் பொட்டாசியம் அதிகளவு காணப்படுகிறது.
பழச்சாறு வகைகள்
ஆரஞ்சு ஜூஸ்
தக்காளி ஜூஸ்
கத்தரிக்காய் சாறு
ஆப்ரிகாட் ஜூஸ்
திராட்சை ஜூஸ்
பால் பொருட்கள், பால் மற்றும் தயிரில் பொட்டாசியம் அதிகளவு காணப்படுகிறது.
No comments:
Post a Comment