Tuesday, 23 June 2026

ஏன் புத்தகம் வாசிக்க வேண்டும்...

 


ஏன்?? படிக்க வேண்டும் இந்த கேள்விக்கு பதில்

ஒருவன் வெகு நாளாக யாசகம் எடுத்துக் கொண்டிருந்தான் அவன் திருவோடு மிகவும் அழுக்கடைந்து விட்டது அதை அருகில் இருந்த ஒரு கடையிலே சென்று பொன் வேலை செய்கிற இடத்தில் அதை ஒருவரிடம் கொடுத்து இதை துடைத்து சுத்தம் செய்து தாருங்கள் என்று கேட்டான் அவர் அந்த திருவோட்டில் இருந்த அழுக்கை எல்லாம் நீக்கினார் அவர் நீக்க நீக்க இவனுக்கு பயம் வந்துவிட்டது திருவோடே தேய்ந்து போய்விடும் போல இருக்கிறதே நிறுத்துங்கள்!!! நிறுத்துங்கள்!!! கொஞ்சம் பொரு நன்றாக சுத்தம் செய்து தருகிறேன் என்று சொல்லி கொண்டே கேட்டார் இந்த திருவோடு எப்படி உனக்கு வந்தது என் அப்பா கொடுத்தார் அவர் யாசகம் பெற்றார் அவருக்கு எப்படி வந்தது அவருடைய அப்பாவும் யாசகம் பெற்றார் அவர் கொடுத்தார் அதை தேய்க்க தேய்க்க அது பளபளப்பாக ஆகிக் கொண்டே இருந்தது ஒரு கட்டத்தில் அது மின்ன ஆரம்பித்தது நன்றாக மின்ன ஆரம்பித்ததும் அதை நன்றாக துடைத்து அவரிடம் கொடுத்து உன்னிடம் இருப்பது திருவோடு அல்ல தங்க ஓடு இது தங்க ஓடு என்று தெரியாததால் மூன்று தலைமுறையாக நீங்கள் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று

நம்மிடமும் அப்படி தங்க திருவோடாக இருக்கிறது நம்முடைய மூளை அதை சிலர் தான் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் வாசிப்பவர்கள் அதை தங்கத்திருவோடே என்று அடையாளம் கண்டு அதன் மூலம் தங்கள் வாழ்க்கையை வளமாக ஆக்கிக் கொள்ள முடியும்

வாசிப்பவர்கள் சுருக்கமாக பேசுவார்கள் ஆனால் அந்த சுருக்கத்திலேயே ஒரு சூத்திரத்தை போல பேசுவார்கள் அவர்களுடைய ஒவ்வொரு சொல்லும் ஒரு வாக்கியத்திற்கு நிகராக இருக்கும் அவர்கள் நான்கே வரிகளில் எழுதுவதை நான் நானூறு வரிகளில் விரித்துப் பார்க்கின்ற அளவிற்கு செரிவு மிகுந்ததாக அவர்கள் எழுதுவார்கள் அப்படிப்பட்ட ஒரு சொற்திறனை அடைவதற்கு நாம் நிறைய வாசிக்க வேண்டும்

திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார்

*சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.*

சுருக்கமாக ஒரே வாக்கியத்தில் படித்தவர்களால் சொல்ல முடியும் என்பதற்கு வரலாற்றிலேயே சான்று நிறைய இருக்கிறது

இயேசு கிறிஸ்து அவர்கள் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றினார் என்பதை கவிதையாக எழுத சொன்னபோது பல பேர் பக்கம் பக்கமாக எழுதினார்கள் ஆனால் ஒரே ஒரு வரியிலேயே ஒரு மாணவன் எழுதினான்

The conscious water choice mentor and Blessed என்று

அந்த ஒற்றை வாசகம் மகத்தான வாசமாக கருதப்பட்டது

உள்ளுணர்வு மிக்க தண்ணீர் தன்னைப் படைத்தவனை பார்த்து நாடியது.

எனவே சூத்திரனை அதிகப்படுத்தி கொள்வதற்கும் நாம் பேசுகின்ற முறையை செறிவு படுத்திக் கொள்வதற்கும் வாசிப்பது முக்கியம் வாசிப்பது ஒரு மனிதனை கருணைமயமானாக்கும்

உலகத்திலேயே தலைசிறந்த பொழுதுபோக்கு புத்தகம் வாசிப்பது தான் ஆகையால் ஒரு ஒரு மணி நேரமாவது புத்தகம் வாசியுங்கள்

No comments:

Post a Comment