Sunday 6 December 2015

RAIN, RAIN GO AWAY....( சென்னை மழை ....1 )

 மழையே மழையே உங்கூர் போயேம்மா


அந்தோ ஏறுதே தண்ணீர் உயரம்!
அதனால் பெருகுதே மக்கள் துயரம்!
மூழ்கி வாடுதே உழவனின் பயிரும்!
பசியால் அழுகுதே பலபேர் உயிரும்!

காசுக்கு ஓட்டை பரிசாய் கொடுத்தோம்!
இலவச அரிசியில் வயிரை நிறைத்தோம்!
ஏமாற்றும் அரசியல் தலைமையால் வீழ்ந்தோம்!
பூச்சுற்றும் பேச்சினைக் கேட்டே கிடந்தோம்!

உந்தன் போக்கிடம் எல்லாம் அடைத்திட்டோம்!
நல்ல மணலை எல்லாம் திருடிட்டோம்!
மக்கா பொருட்களை மணலில் இட்டோம்!
மாபெரும் மரங்களை தணலில் இட்டோம்!

வடிக்கிறோம் இன்று அதனால் கண்ணீர்!
வடிவாயா என்று பார்க்கிறோம் தண்ணீர்!
ஏரி குளங்களை கட்டடம் ஆக்கினோம்!
கட்டடம் இருந்தும் நடுவீதியில் நிற்கிறோம்!

எங்கும் நீராய் நிறைந்து இருக்கின்றாய்!
குடிக்கும் நீரோ துளியும் இருக்கவில்லை!
பாலும் ரொட்டியும் விலையது விண்ணில்
நாளும் பொழுதும் கண்ணீர் என்னில்

மழையே மழையே கருணை காட்டம்மா..
மாந்தர் கஷ்டம் தூர ஓட்டம்மா..
சிலநாள் கழித்து பார்க்க வாயேம்மா..
விண்ணில் ஏறி உங்கூர் போயேம்மா...!

அடுத்து நீவரும்வேளை திருந்தி இருப்போமோ
செய்திட்ட பிழைக்கெல்லாம் வருந்தி இருப்போமோ
மீண்டும் இதையே திரும்பி சொல்வோமோ
மனுச புத்தியைத்தான் மாற்ற மாட்டோமோ...???

-   Poem  taken from WhatsApp... Thanks to the author

No comments:

Post a Comment