பெல் மன்றம் சார்பில் 6-7-97 அன்று நடைபெற்ற காந்த தத்துவ கருத்தரங்கு மிக, மிக சிறப்பாக மகரிஷி அவர்களுக்கு மிகவும் நிறைவாக நடைபெற்றது. அந்த சமயம் மூன்று நாட்கள் மகரிஷி எங்களுடன் தங்கியிருந்ததது எங்கள் பெற்றோர்கள், முன்னோர்கள் செய்த புண்ணியம்.
நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு மகரிஷி அவர்களிடம் வரவு செலவு கணக்கு ஒப்படைத்தோம். மகரிஷிக்கு குரு காணிக்கையாக ரூ 10000/ அளித்தோம். எல்லா செலவுகளும் போக மீதி ரூ 19300/ இருந்தது. அதனையும் மகரிஷி அவர்களிடம் தந்து ஏற்றுக்கொள்ள வேண்டினோம். அதனை மகரிஷி எங்களிடம் திருப்பித் தந்து " இதனை ஒரு வங்கியில் FD ஆக செலுத்தி வையுங்கள். எதிர்காலத்தில் நீங்கள் கட்ட இருக்கும் அறிவுத்திருக்கோயிலுக்கு உதவும் " எனக் கூறி " நீங்கள் கட்ட இருக்கும் அறிவுத்திருக்கோயில் பன்னாட்டு மையமாகத் திகழும். பல நாட்டு அறிஞர்கள் அங்கு வந்து பயிற்சி பெறுவார்கள். தொண்டாற்றுவார்கள் "என்ற வாழ்த்தினை மூன்றாவது முறையாக சொன்னார்கள். இந்த வாழ்த்தே பெல் அறிவுத்திருக்கோயிலின் முதல் விதையாக மாறி அறிவுத்திருக்கோயில் திட்டங்களை மனதளவில் ஆரம்பித்தோம்.
மூன்று நாட்கள் கழித்து திருச்சியிலிருந்து வைகை விரைவு ரெயில் மூலம் சென்னை திரும்பினார்கள்.
நாங்கள் அவருக்கு நிகழ்ச்சியில் எடுத்த போட்டோக்கள், பதிவு செய்யப்பட்ட வீடியோ காசெட்டுகள் போன்றவற்றை அனுப்பி வைத்தோம்.
மகரிஷி அவர்கள் ஆழியார் திரும்பியவுடன் எங்களுக்கு எழுதிய கடிதம் கீழே -
ஆழியாரில் மகரிஷி அவர்களை சந்திக்கும்போதெல்லாம் முதலில் அவர்கள் " திருச்சியில் நீங்கள் நடத்தினீர்களே ஒரு மாபெரும் கருத்தரங்கம் ... என் கண்களைவிட்டு அகலாத காட்சியாக இருக்கின்றது " எனப் பாராட்டிவிட்டு வாழ்த்துவார்கள்.
எங்களுக்கோ 1995ம் ஆண்டு மகரிஷிக்கு நடந்த கசப்பான அனுபவ நினைவுகளை மாற்ற எடுத்த முயற்சிகள் நிறைவாக நிறைவேறிய மகிழ்ச்சி
இந்த பதிவு ஏப்ரல் மாதத்தின் 600th பதிவு. வலைப்பூவின் 9250th பதிவு
No comments:
Post a Comment