துளசி அக்கா இன்றிருந்தால் 78 வது பிறந்ததினத்தினைக் கொண்டாடி இருப்பார்கள்.
எனக்கு இன்னொரு அம்மாவாக, என்னை நெறிப்படுத்தி, நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்த என் இதய தெய்வத்திற்கு அஞ்சலிப் பதிவு -
துளசி அக்கா ஒரு கர்ம யோகி.
சகலகலாவல்லி.
ரசனை மிக்கவர்கள்.
எதனையும் கற்றுக்கொள்ள விரும்புவார்கள்.
திருமணம் ஆவதற்குமுன் திருக்குறள் முழுதையும் மனப்பாடம் செய்ய முயன்று 500 க்கும் மேற்பட்ட குறள்களை மனப்பாடம் செய்தவர்கள்.
தன் இறுதி நாள் வரை கணவனுக்கான கடமைகளை தவறாமல் செய்தவர்கள்.
அந்த காலத்தில் வசதி, வாய்ப்புகள் இருந்திருந்தால் அக்கா மிக உயர்ந்த இடத்திற்கு வந்திருப்பார்கள்.
அவர்கள் திருமணமாகி சிதம்பரம் நகருக்குச் செல்லும்வரை எனக்கு தலை சீவி பள்ளிக்கு அனுப்பிவைத்தவர்கள். அதுவரை நான் என் முகத்தினை கண்ணாடியில் பார்த்ததில்லை . அவர்கள் நினைவாகவே அவர் அமைத்துத்தந்த என் ஹேர் ஸ்டைலை இன்னும் கடைபிடிக்கின்றேன்.
அவரை பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வப்போது பதிவிடுகின்றேன்.
இன்று நான் அனுபவிக்கும் எல்லா நல்லவைகளும் அவர் தந்த கொடை.
அவர் நினைவாக ஏதேனும் ஒரு நல்ல செயல் இந்த ஆண்டுக்குள் செய்திட திட்டமிட்டுள்ளேன்
வாழ்க துளசி அக்கா புகழ்!
பன்னிரண்டு ஆண்டுகளுக்குமுன் அக்கா பற்றிய பதிவு பார்க்க
இங்கே click செய்யவும்

No comments:
Post a Comment