Sunday, 15 December 2024

மகரிஷி அவர்களுடன்.........25

மகரிஷி அவர்களை நான் 1972ம் ஆண்டே தெரிந்து வைத்திருந்தாலும் தீட்ஷை பெற முடியவில்லை ( அப்போதெல்லாம் 21 வயது நிரம்பியிருந்தால் மட்டுமே தீட்ஷை பெறமுடியும் - எனக்கோ 18தான் நிரம்பியிருந்தது)
2005
1977ம் ஆண்டுதான் பேரா Dr நாகராசன் HOD Mech Engg அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மூலம் ஆக்கினை தீட்ஷை பெற்றேன். 

1980ம் ஆண்டு மகரிஷி திருச்சி வந்தபோது திருச்சியில் கிளை சங்கம் துவக்கப்பட்டது. நான் செயலாளராகப் பொறுப்பேற்றேன்.

விளம்பரத்திற்காக சர்க்குலர் பிரிண்ட் செய்ய கீழ்கண்ட நோட்டீஸ் கிடைக்கப்பெற்றேன். 





இந்த நோட்டீசை வைத்து திருச்சி கிளை சங்க முகவரியோடு புதிதாக அச்சடித்தோம்.
தீட்ஷை பெறுபவர்கள் ரூ 11 செலுத்தவேண்டும்.
இதில் அன்பொளி ஆண்டு சந்தா ரூ 6ம் தலைமை மன்றத்திற்கு ரூ 2ம் 
கிளை சங்கத்திற்கு ரூ 2ம்  பாக்கி ரூ 1 தபால் மற்றும் மணியார்டர் செலவுகளுக்காக என பிரிக்கப்பட்டது.
ஒவ்வொரு அன்பருக்கு தனித்தனியாக மணியார்டர் அனுப்புவேன். மகரிஷி சென்னையில் இருந்தால் சந்தா பெற்றுக்கொண்டதன் அடையாளமாக 
MO acknowledgement slipல் அவர் கையொப்பம் இருக்கும். அன்பர்கள் அதனை பொக்கிஷமாக பாதுகாத்தார்கள்.

பல அன்பர்கள் தீட்ஷை பெற வந்து, ஆண்டுதோறும் வருமானத்தில் ஒரு சதவிகிதம் சங்கத்திற்கு நன்கொடை அளிக்கவேண்டும் என்பதை படித்துவிட்டு தீட்ஷை பெறாமலேயே சென்றிருக்கின்றார்கள். 

பிறகு இந்த வாக்கியம் ( 1 %  நன்கொடை ) சர்குலரிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டது.


THIS IS THE 15000th POST OF THIS BLOG

DURING THE FIRST TWO WEEKS  OF DECEMBER 2024 ALONE, 
THE NO OF PAGE VIEWS 
CROSSED 34000.

No comments:

Post a Comment