1. தேர்வு மதிப்பெண் புத்திசாலித்தனத்தின் ஒரு சிறிய பகுதி மட்டுமே.
2. நல்லது, கெட்டது: இதன் வரையறை கணிப்பாளரைப் பொறுத்து வேறுபடுகிறது.
3. என்னிடம் உள்ள எல்லா நம்பிக்கைகளும் என்னுள் தோன்றியவை அல்ல. ஆரம்ப வயதுகளில் புகுத்தப்பட்டவை தான் பல.
4. எது பிரபலமோ அது சரியானது என்றோ குறைபாடற்றது என்றோ எனக்கு உகந்தது என்றோ பொருளல்ல.
5. பொருள் இன்பத்தைத் துவங்கலாம், ஆனால் இன்பம் நிலைக்க பொருள் மட்டும் போதாது.
6. காதல் கட்டாயமல்ல. காமம் தவறுமல்ல.
7. புனிதம் = அகநிலை, தனிப்பட்டது; கண்ணியம் = பொதுநிலை, கட்டாயம்.
8. உணர்ச்சி நிலை, அறிவு நிலை - ஒன்றுக்கொன்று கட்டுப்பட்டதல்ல.
9. வாழ்வின் தேவைகளை அடைவது கடினமல்ல; விரும்புவதை அடைவது சுலபமல்ல; கிடைத்ததை எப்போதும் விரும்புவது சாத்தியமுமல்ல.
10. மனித வாழ்வின் படிநிலை: 1. சுவாசம். 2. நேசம். 3. உல்லாசம்.
No comments:
Post a Comment