Tuesday, 30 September 2025

ஜோக்ஸ்

ஒருவர் : நேத்து எங்க வீட்டுல திருடன் வந்து எல்லாத்தையும் தூக்கிட்டு போயிட்டான்..

மற்றொருவர் : நீங்க தான் துப்பாக்கி வச்சிருக்கீங்களே...

ஒருவர் : நல்ல வேளை.. அத டிராவுல வச்சி பூட்டி வச்சிருந்தேன்... இல்லன்ன அதையும் எடுத்துட்டு போயிருப்பான்...

மற்றொருவர்: ????!!!!!

மச்சான் ! நம்ம சொல்றத தெளிவா கேட்டுட்டு! அதுக்கு எதிராக செய்றது இந்த நாலு பேருதான் !

யாருடா மாப்பிள்ளை அது

  1. கடவுள்
  2. டைலர்
  3. நான் பெத்தது

அப்புறம் நான்காவது .

வேற யாரு நான் கட்டிக்கிட்டது தான்!



மகன் - அப்பா! இனி நம்ம ஹோட்டலுக்கு தினம் பத்து கிலோ சிக்கன் வாங்கினால் போதும் அப்பா!

ஹோட்டல் முதலாளி - ஏண்டா மவனே! என்ன ஆச்சு!

மகன் - இது புரட்டாசி மாதம் அப்பா! அப்புறம் நட்டம் ஆகி விடும்!

ஹோட்டல் முதலாளி - டேய் மவனே! இனி முப்பது கிலோ சிக்கன் சொல்லு தினம்!

மகன் - என்னப்பா சொல்றீங்க!

ஹோட்டல் முதலாளி - டேய் இப்ப யாரும் அசைவம் வீட்டில் சமைக்க மாட்டாங்க! குழந்தைகளுக்கு வெளியில் தான் வாங்கி கொடுப்பாங்க அதான் சொல்றேன்! நீ எப்ப தான் இந்த வியாபார நுணுக்கத்தை கற்று கொள்ள போகிறாயோ!

No comments:

Post a Comment