சீனாவின் ஷான்சி மாகாணத்தில், ஒரு மகன் கவலைக்கிடமான நிலையில் இருந்த தன் தாயைப் பராமரித்து வந்தார். ஒருநாள், தாயின் படுக்கை அருகிலேயே அவர் சோர்வில் கண்ணயர்ந்துவிட்டார்.
அவர் கண்விழித்தபோது, தாய் உயிருடன் இல்லை. ஆனால், அவர் கண்காணிப்பு கேமராவின் (சிசிடிவி) பதிவுகளைப் பார்த்தபோது, ஒரு காட்சியைக் கண்டு இதயம் நொறுங்கிப் போனார்: தன் இறுதித் தருணங்களில், அந்தத் தாய் தன் மகன் மீது போர்வை சரியாக இல்லை என்பதைக் கண்டிருக்கிறார். உடனே, தன் உடலில் மிச்சமிருந்த கடைசி சக்தியை எல்லாம் ஒன்றுதிரட்டி, உறங்கும் மகன் மீது போர்வையை இழுத்து மூடி, அவரை குளிரில் இருந்து பாதுகாத்திருக்கிறார். அதன் பிறகே, தன் கண்களை நிரந்தரமாக மூடியிருக்கிறார்.
அவன் பிறந்த நாளில், அவள் அவனைப் போர்த்திவிட்டாள்.
அவள் இறந்த நாளில், அவள் அவனைப் போர்த்திவிட்டாள்.
அதுவே அந்தத் தாயின் கடைசி அன்புச் செயல்.
நாம் இந்த பூமிக்கு வருவதற்கு முன்பாகவே நமக்கென்று சில உறவுகளை இறைவன் அமைத்திருக்கிறான் …அந்த உறவுகளின் மனதை ஒருபோதும் காயப்படுத்தாதீர்கள்..!!
No comments:
Post a Comment