நீங்க எவ்வளவு பெரிய விஜய் ஃபேனா இருந்தாலும்
கல்யாணமான முதல் வருஷம் தல தீபாவளி தான் கொண்டாடியாகணும்..!
தீபாவளி கொண்டாடிட்டு உடனே எப்படி வேலைக்கு வர முடியும்?
மிச்சம் இருக்கும் பலகாரங்களும் சாப்பிட்டு தான வர முடியும்?
இத நல்லா தெரிஞ்சு வச்சுக்கிட்டு அந்த வருணபகவானே வந்து லீவு கொடுத்தார் பாரு,
என்ன மனுஷன்யா..!
நமக்கு வரும் பட்டாசு கிஃப்ட் பாக்ஸும் வாழ்க்கையும் ஒன்னு தான்
பிடித்த பட்டாசு கொஞ்சமாய் இருக்கும்
பிடிக்காதது நிறைய இருக்கும்
பார்க்க எல்லாமே கலர் கலரா இருக்கும்
வெடிச்ச பின்னாடி எல்லாமே கரியா மாறிடும்..!
அடுத்த இரண்டு நாளைக்கும் சைடிஷ்க்கு பிரச்சினை இல்லை தீபாவளிக்கு மீந்த பலகாரங்கள்தான் எல்லா சாப்பாட்டுக்கும் சைடிஷ்!
மாடிப்படி ஏறி இறங்கினால் உடம்பு பலவீனமாக இருக்கா இல்லையான்னு தெரிஞ்சிடும்,
உறவினர்கள் வீட்டு வாசல்படி ஏறி இறங்கினால் உறவு பலமாக இருக்கா இல்லையான்னு தெரிஞ்சிடும்!









No comments:
Post a Comment