Saturday, 9 August 2014

குரு - சீடன்....14

ஒரு குரு தன் சிஷ்யர்களிடம் , " ஒரு நாளின் இருள் விலகி வெளிச்சம் பரவும் அந்தக் கணத்தை மிகச் சரியாக நாம் எப்படிக் கண்டுபிடிப்பது ?" என்று கேட்டார். 

' இது நாய், இது ஆடு என்று தெளிவாகக் கூறுமளவுக்கு வெளிச்சம் பரவும் போது !', 
' ஆல மரத்துக்கும் அரச மரத்துக்குமான வித்தியாசம் தெரியும் சமயம் !' 
என்பன போன்ற இன்னும் பல விளக்கங்கள் .

 'இவை எதுவுமே இல்லை !' என்ற குருவிடம், , சரியான பதிலைக் கேட்டனர் மாணவர்கள். 

" நமக்கு அறிமுகமே இல்லாதவர் நம்மைத் தேடி வந்தாலும் , நம் சகோதரர் என நினைத்து வரவேற்று உபசரிக்கும் அளவிலான இருள் விலகி ஒளி பரவும் கணம் !" என்றார் குரு.

 எனவேதான் அவர் குரு!

அமைதிக்கான நோபல் பரிசுபெற்ற ஷிமொன் பெரெஸ் சொன்ன குட்டிக் கதை.

No comments:

Post a Comment