Sunday, 3 August 2014

இளமை...2

இளமை நிலையாமை

காலகாலத்துக்கும் இவ்வுலகில் நாம் வாழ்ந்திருப்போம் என்பது எத்தனை அறிவீனமோ அத்தனை அறிவீனம் நம் இளமை நிலைத்திருக்கும் என்று நினைத்திருப்பதும்,
திருமூலர் இளமை நிலையாமை குறித்துப் பாடிய பாடல்
"கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்சில நாளில்
விழக்கண்டுந் தேறார் வியனுலகோரோ"

காலையில் உதிக்கின்ற சூரியன் மாலையில் மறைகின்றது, நம் கண்ணெதிரே கன்று எருதாய் வளர்வதும், பின்பது மூப்படைந்து மடிவதும் நிகழ்கிறது, நாம் கொண்ட இளமையும், அதுபோல் மறையும் என்பதை உலகோர் உணர்வதில்லை - இது பாடலின் பொருள்

No comments:

Post a Comment