Sunday, 3 August 2014

பக்தி....5

பக்தி கொண்டவன் தன் சுய நலத்தேவைகளுக்காக் , ஒரு சாதனமாக இறைவனைப் பயன்படுத்திக் கொள்கிறான். இந்த்த் தேவைக்காக, பூஜை, திருவிழா என்றெல்லாம் வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்வார்கள். ஒருவேளை அவன் எண்ணியது, பிரார்த்தித்த்து எதுவுமே நடைபெறாமல் போனால், தெய்வத்தை வணங்குவதை நிறுத்தியே விடுவான். தூஷனம் செய்ய ஆரம்பித்துவிடுகின்றான்.

எண்ணியது ஈடேறினால், தெய்வ சான்னித்தியம் மிகுந்த இடமென்று கொண்டாடுவான். கல் – தெய்வம் – கல் என்ற அடைமொழி இறைவனுக்கு சூட்டப்படுகின்றது!

சுய நலத்திற்காக, தனது தேவைக்காக ஏற்படும் பக்தியானது எப்படி வந்த்தோ அப்படியே நடுவில் காணாமலும் போய்விடுகின்றது!
அமுதம் கிடைக்க பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் இணைந்து செயல்படும்போது மஹாவிஷ்ணு கூறுகிறார் – பாற்கடலைக் கடையும் போது, பலவிதமான பொருள்கள் வெளிப்படும். அவற்றை விரும்பாதீர்கள். இறுதியாகத் தான் அமுதம் கிட்டும். என்கிறார். அதே போல இருந்த்தால், தேவர்களுக்கு இறுதியில் அமுதம் கிட்டியது!

இடையில் வாருணி எனும் மது வெளிப்பட்ட்து. அதனை அசுர்ர்கள் அருந்தி புத்தி தடுமாறிப் போனார்கள். இறுதி இலக்கான அமுதம் கிட்டவில்லை.

லட்சியத்தில் உறுதியாக இருப்பவர்கள் முக்தி அடையவேண்டும் என்கிற லட்சிய உணர்வுடன், குளம் வெட்டினால் தேவலோகத்தில் வசிக்கலாம்… இது செய்தால் இந்தப் பலன் கிட்டும் என்று பலனை எதிர்பார்த்து செய்யாமல், செய்பவற்றின் பலாபலனை இறைவனுக்கே சமர்ப்பணம் செய்து வருபவர்க்கு இறைவனருளால் தவறுகள் நிகழாதவாறும் தவறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும் நிலையில் தடுத்தாட்கொள்ளப்படுவதும் நிகழும்.


முக்திக்கு பக்தி ஒன்று தான் பிரதானம. அது திடமான , அர்ப்பணிப்பு உணர்வுடன், இறைவன் மீது மட்டுமல்ல ஒவ்வொரு ஜீவராசியிடமும் அன்புடன் அர்ப்பணிப்புணர்வுடன் இருத்தல் அவசியமாகிறது!

from -  http://atchayakrishna.com

No comments:

Post a Comment