விவேகானந்தருக்கு நூறு இளைஞர்கள் வேண்டும்..
நீங்கள் தயாரா?...2
சுவாமி விமூர்தானந்தர்
நீங்கள் தயாரா?...2
சுவாமி விமூர்தானந்தர்
இளமை பற்றிய இரண்டு பிரச்னைகள்
ஒரு மனிதனின் இளமைப் பருவம் என்பது 15 முதல் 30 வயது வரைதான். அந்தக் காலகட்டத்தில் பொதுவாகப் பலரும் பெற்றோரைச் சார்ந்தே இருக்கிறார்கள் அல்லது பொறுப்பு களைச் சுமக்கத் தைரியமின்றியோ, அனுபவமோ, வாய்ப்போ இன்றி இருக்கிறார்கள் அல்லது அப்போதுதான் சம்பாதிக்கத் தொடங்கிச் சொந்தக் காலில் ஓரளவிற்கு நிற்கிறார்கள்.
பெரும்பாலான பக்தர்கள், ஆன்மிகத்தில் விருப்பம் கொள்ளும் நல்லவர்கள் பலரும் 30 வயதிற்குப் பிறகே ஆன்மிகத்தின் பக்கம் திரும்புகிறார்கள். அவர்களுக்கு அப்போதுதான் ஆன்மிக வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ம், உண்மையான தேவையு ம் வருகிறது.
இளைஞர்கள் பலரின் நிலைமை இப்படி இருக்கும்போது சுவாமிஜி தமக்கு இளைஞர்கள் வேண்டும் என்கிறாரே, ஏன்?
மற்றுமொரு பிரச்னை. "சுவாமிஜி பணித்தப் பணிகளைச் செய்ய எங்களுக்கு வாய்ப்பில்லையா? அல்லது தகுதி தீர்ந்துவிட்டதா?" என்று நடுத்தர மற்றும் மூத்த வயது அன்பர்களின் நெஞ்சங்களில் ஒரு கேள்வி நிழலாடுகிறது. இதற்குப் பதிலளிக்க,இளமைப் பருவம் பற்றி ஆழமாகச் சிந்திக்க வேண்டியு ள்ளது.
வாலிபம் என்பது வயது, ஆரோக்கியம், மன வளர்ச்சி ஆகியவைகளின் அடிப்படையில் என்றால், சில வருடங்களே நிற்கக்கூடிய அந்த வாலிபத்தைக் கொண்டு பெரிதாக என்ன சாதித்து விட முடியும்?
நமது ஆன்மிக நூல்கள் பிரச்னைக்குரிய இந்தக் கேள்விக்குப் பதில் சொல்கின்றனவா? ஆம்! "உடல் அழியக் கூடியது மனம் சிதையக் கூடியது அறிவு மங்கிவிடும் வசதி, வாய்ப்பு , ஆரோக்கி யம் எல்லாமே மாயை" என்று மட்டும் அவை சொல்லவில்லை.
தொடர்ச்சியாக ஒன்று செம்மையாகச் செயல்பட, நிலையான ஒன்று அதற்குப் பின்பு லமாக இருக்க வேண்டும். வெள்ளித்திரை இருந்தால்தான் சினிமா. அதே போல் நமது வாழ்வில் தோன்றி மறையு ம் அம்சங்கள் எத்தனை எத்தனையோ! அவற்றிற்கெல்லாம் ஆதாரமாக, நிலையான பரமாத்மா - இறைவன் - வீற்றிருக்கிறார்.
இறைவன் இருப்பதால் இருக்கிறோம்!
No comments:
Post a Comment