விவேகானந்தருக்கு நூறு இளைஞர்கள் வேண்டும்..
நீங்கள் தயாரா?...3
சுவாமி விமூர்தானந்தர்
நீங்கள் தயாரா?...3
சுவாமி விமூர்தானந்தர்
சக்தி எங்கிருந்து வருகிறது?
இறைவனது அம்சம் நம்முள் ஆன்மாவாக உள்ளது. ஆன்மாவானது நம் கண்களுக்குப் பு லப்படாதது இருந்தாலும் நம் அகங்காரமும், சுயநலமும் நம்மிடமிருந்து விலகும் போதும், மக்களுக்குச் சேவை செய்து அதை ஆண்டவனுக்கு அர்ப்பணிக்கும்போதும் ஆன்மா தன்னை வெளிப்படுத்திக் கொள்ளத் தான் செய்கிறது.
"நாம் ஆன்ம சொரூபம்" என்பதுதான் நம் உண்மை நிலை என்று இந்து மத சாஸ்திரங்கள் கூறுகின்றன. சுவாமி விவேகானந்தர் ஆன்மாவின் ஆற்றலைப் பற்றி முழங்குகிறார்!
""...ஒவ்வொருவருக்கும் அவர்களின் உண்மை இயல்பைப் போதியு ங்கள். உறங்கும் ஆன்மாவை எழுப்பு ங்கள், அது எவ்வாறு விழித்தெழுகிறது என்பதைப் பாருங்கள். உறங்கும் ஆன்மா மட்டும் விழித்தெழுந்து தன்னுணர்வுடன் செயலில் ஈடுபடுமானால் சக்தி வரும், பெருமை வரும், நன்மை வரும், தூய்மை வரும், எவையெல்லாம் மேலானதோ அவை அத்தனையு ம் வரும்."" (கொழும்பு முதல் அல்மோரா வரை. பக்கம் 141)
எல்லா ஆற்றல்களும் இறைவனிடமிருந்தே வருகின்றன. ஆகையால் யஜுர் வேதம் (19-9), "இறைவா, நீ வீரியமாக இருக்கிறாய் எனக்கு வீரியம் வழங்கு. நீ பலமாக இருக்கிறாய் எனக்கு பலம் வழங்கு. நீ கஷ்டத்தைச் சகிக்கிறாய் எனக்குக் கஷ்டத் தைச் சகிக்கும் தன் மையை வழங்கு" என்று பிரார்த்தனை செய்யு ம் பாங்கைக் கற்றுத் தருகிறது.
நம்மிடம் உள்ள எல்லா சக்திகளுக்கும் ஆன்ம சக்திதான் ஆதாரம். ஆன்மா என்பது உடல், மனம் போன்று தோன்றி மறையாதது. அது எப்போதும் இருப்பதால்தான் ஆன்ம பலம் பெற்ற வர்கள் என்றும் இளமைச் சக்தியுடன் இருக்கிறார்கள். பரமான் மாவை "அஜரா" - "முதுமையே இல்லாதது" என்று பிருஹதாரண்யக உபநிஷதம் கூறுகிறது.
ஆன்ம அனுபூதி பெறுவதற்கோ, இறைவனிடம் பக்தி கொள்வதற்கோ, மன ஒருமை பெறுவதற்கோ, மேற்கொண்ட உயர் லட்சியத்தை அடைவதற்கோ, தடைகளைச் சமாளிப்பதற்கோ, இளமையில்தான் ஒருவருக்கு அதிக வாய்ப்பு கள் உள்ளன.
இளமையில் உடலில் அதிக சக்தி, உள்ளத் தூய்மை, சாதிக்கக்கூடிய துடிப்பு , அறிவில் தெளிவு, சுயநலமின்மை ஆகியவை நன்கு மிளிரும். இந்தப் பண்பு கள் யாவும் ஆன்ம சக்தியைத் தூண்டும் ஆன்ம மலர்ச்சி விரைவில் நிகழும். இதற்காகத்தான் சுவாமிஜி இளைஞர்களை ஊக்குவித்தார்.
எல்லா அம்சங்களிலும் இளமை இருப்பது ஒருவருக்குக் கிடைத்த வாய்ப்பு ஆகும். இறைவனோடு அவற்றையெல்லாம் ஈடுபடுத்தும்போது இளமைச் சக்தி என்றொரு புதிய சக்தி பிறக்கிறது. என்ற கட்டுரையில் சுவாமி பஜனா னந்தர் விளக்குகிறார்.)
இளமையாக இருப்பது ஒன்று இளமைச் சக்தியுடன் - ஆன்ம சக்தியுடன் இருப்பது முற்றிலும் வேறு. வெறுமனே உயிர் இருப்பதற்கும், உயிரோட்டம் பொங்கிப் பெருகுவ தற்கும் மலையளவு வேறுபாடு உள்ளது.
இறைவனோடு இயைந்து, அவனது இச் சைப்படி வாழ்பவர்கள் என்றும் இளமைச் சக்தியுடன் இருக்கிறார்கள். ஆன்மிக சாதனையின் நோக்கமே சக்தி பெறுவது அல்லவா?
No comments:
Post a Comment