விவேகானந்தருக்கு நூறு இளைஞர்கள் வேண்டும்..
நீங்கள் தயாரா?...4
சுவாமி விமூர்தானந்தர்
ஆன்மிக சாதனைகள் மூலம் சக்தி!
ஆன்மிக சாதனைகள் பல உள்ளன. அவற்றுள் இறைநாம மந்திர ஜபம் முக்கியமானது. ப்ரணவம் எனப்படும் ஓம் இல்லாமல் மந்திரம் இல்லை. அதன் பொருளைப் பாரதியார் விளக்குகிறார்!
ப்ர+நவம் = ப்ரணவம். "ப்ரணவம் எனப் படுவது எப்போதும் கணந்தோறும் புதிய புதிய உயிருடன், என்றும் அழியாத அமிர்த நிலையைப் பெற்றிருப்பது என்பதாகும்." பாரதியார் கூறிய அமிர்த நிலைதான் மாறாத தன்மையு டன் கூடிய இளமைச் சக்தி ஆகும். இதுவே உயிர்ச் சக்தியு ம் ஆகும்.
அன்னை பராசக்தியிடம் இதையே அவர் திரும்பத் திரும்பப் பிரார்த்திக்கிறார்!
"...எம்மைப் புதிய உயிராக்கி..."
"நல்லதோர் வீணை செய்தே... நித்தம் நவமென சுடர் தரும் உயிர் கேட்டேன்!"
உயிரோடு இருந்தபோதே பாரதியார் ஏன் "நவமென சுடர் தரும் உயிரைக்" கேட்டார்? அவர் உயிரைக் கேட்கும்போது தம்முள்ளும், தமது கருத்துகளிலும் எப்போதும் உயிர்ச் சக்தி இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்தார். அதனால்தான் அவர் மக்களுக்காக உயிர் கொடுத்து உழைக்க முடிந்தது.
பாரதியின் இந்தப் பிரார்த்தனைக்கு விளக்கம் வேண்டுமென்றால், சுவாமி விவேகானந்தரின் புகழ் பெற்ற கீழ்க்கண்ட பொன்மொழிகளைச் சிந்திக்க வேண்டும்.
""யாருடைய இதயம் ஏழைகளுக்காகக் கண்ணீர் வடிக்கிறதோ, அவர்களையே நான் மனிதர்கள் என்பேன் மற்றவர்கள் எல்லாம் வாழ்பவர்கள் என்பதைவிட, இறந்து போனவர்களே.""
குன்றாத இளமை!
குமரக் கடவுள், ஆணவமிக்க சூரனை வதைக்கவே அவதரித்தார். குமரன் என்றால் குன்றாத இளமை உடையவன் என்று பொருள். ஆன்ம சக்தியை நாம் பெறாமல் இருப்பதற்கே காரணம் "நான்", "எனது" என்ற பற்றுக்களே என்று பக்தி இலக்கியங் கள் கூறும். "நான்", "எனது" பந்தங்களை யார் துறக்கிறார்களோ, அவர்கள் குமரனின் அருளைப் பெறுவர்.
பிரார்த்தனை, பூஜை, ஜபம், பாராயணம், தியானம் ஆகியவற்றின் மூலம் நாம் உயிர்ச் சக்தியை உடல், உள்ளம், அறிவு என்று எல்லாவற்றிலும் பெற முடியும். அபிராமி பட்டர் தமது அபிராமியம்மை பதிகத்தில் அபிராமியை வழிபடும் பக்தர்கள், "கலையாத கல்வியும், குறையாத வயதுமோர், கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும், குன் றாத இளமையு ம் கழுபிணி இலாத உடலும் சலியாத மனமும்...." பெறுவார்கள் என்று கூறுகிறார்.
சிவனைக் "குழகன்" (என்றும் இளமையாய் இருப்பவன்) என்று குறிப்பிடுகிறார் சம்பந்தர். "தம்மையே ஒக்க அருள் செய்பவர்" (திருவாய் மொழி) அல்லவா ஆண்டவர்? வயதான திருநீலகண்டரும், அவரது மனைவியு ம் சிவபெருமானின் தரிசனம் பெற்றதும் "மூப்பு நீங்கி விருப்பு றும் இளமைப் பெற்று..." என்கிறார் சேக்கிழார்.
மக்கள் மதித்துப் போற்றும் சான்றோர்கள், நம்மை நல் வழியில் தூண்டிவிடும் தலை வர்கள் யாவரும் என்றும் இளைஞர்களே! ஆம், நல்லோர் நெஞ்சங்களில் நீங் காது, நினைவுகளில் மூப்படையாமல், ஊக்கச் சக்தியாக இடம் பெற்றுள்ள அவர்கள் என்றும் இளைஞர்கள் அல்லாமல் வேறு யார்?
ஆகவே, என்றுமுள்ள இறைவனிடம் உண்மை பக்தியு டனும் ஆன்ம சக்தியு டனும் எவன் வாழ்கிறானோ, அவன் என்றும் இளமைச் சக்தி பெற்றவன். அவனே இளைஞன். ஆன்ம சக்தி பெறுவதற்கு இள வயது - முதிய வயது, ஆண்-பெண், ஏழை - பணக்காரன், படித்தவன்-பாமரன் என்று எல்லோருக்கும் வாய்ப்பு ம் தகுதியு ம் உள்ளது.
மேற்கூறிய காரணங்களால்தான் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரும், சுவாமி விவேகானந்த ரும் இளைஞர்களைத் தேடிப் பிடித்து அன்பைப் பொழிந்தார்களோ! ஸ்ரீராமகிருஷ்ணர் தூயவர்களுக் காக தேவியிடம் பிரார்த்தித்தார். அவ்வாறே சுவாமிஜியு ம் இளைஞர்களை வேண்டினார்.
இவர்கள் இவ்வாறு விரும்பியது புதிய விஷயமல்ல. ஏனெனில் சநாதன தர்மத்தின் ரிஷிகள் செய்ததைத்தான் இவர்களும் செய்தார்கள். (சநாதன தர்மம் என்றாலே நித்திய நூதனம் அதாவது "என்றும் புதிது" என்று பொருள்.)
பரம்பொருளை உணர்ந்து, ஆனந்தமாய் உள்ள ஒரு ரிஷி, தமது ஆன்மிகப் பேரின்பத்தை நல்ல சீடர்களுடன் பகிர்ந்துகொள்ள இறைவனிடம் பிரார்த்திப்பதைப் பாருங்கள்!
"பரம்பொருளே! எனக்கு எல்லாத் திசை களிலிருந்தும் ஏராளமாக மாணவர்கள் வரட்டும். அவர்கள் பு லனடக்கமும், மனக்கட்டுப் பாடும், நல்லொழுக்கமும் உடையவர்களாகவும் இருக்கட்டும்". (தைத்திரிய உபநிஷதம்- சிக்ஷாவல்லி - 4.23)
மேற்கூறிய சிந்தனைகளிலிருந்து சுவாமிஜி வேண்டிய இளைஞர்கள் எப்படிப்பட்ட வர்கள் என்பதை ஓரளவிற்கு நாம் பு ரிந்து கொள்ளலாம்.
ஆகவே இளைஞர்களே, நீங்கள் உடலால், வயதால் இளைஞரா? - நீங்கள் கால் பங்கு இளைஞர் என்பதாக அறிந்து கொள்ளுங்கள்.
உணர்ச்சியால், ஊக்கத் தால் வாலிபரா?- அது அரைப் பங்கு. அன்பால், உழைப்பால், அறிவுத் தாகத்தால் நீங்கள் துடிப்பானவரா?- முக்கால் பங்கு இளமை உங்களிடம் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால் மேற்கூறியவை இருந்தால் மட்டும் இளமையாக இருக்கிறீர்கள் என்றும், அந்தக் கால கட்டம்தான் இளமைக் காலம் என்ற முடிவுக்கும் வந்தால், அது ஒரு மேலோட்டமான பு ரிதலாகத் தான் இருக்கும்.
எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களான இளைஞர்களே, உடல், மனம் போன்றவற்றுள் மட்டும் சக்தி பெறுவதற்காக உங்களுள் பலரும் பாடுபடுகிறீர்கள் அது நல்லதுதான்.
ஆனால் சுவாமிஜி நம்மிடம் வேண்டுவது நாம் அனைவரும் ஆன்ம சக்தியைப் பெற வேண்டும் என்பதே ஆகும். அதற்காக நாம் தொடர்ந்து பாடுபடுவோம்.
அதனால்தான் சுவாமிஜி, "எழுந்திருங்கள், விழித்துக் கொள்ளுங்கள், லட்சியத்தை அடை யு ம்வரை இடைவிடாது செல்லுங்கள்" என்று முழங்கினார்.

No comments:
Post a Comment