Thursday 1 June 2023

ஞானவயல் - A VERY BRIEF RECAP OF ELEVEN AND HALF YEARS PERFORMANCE

ஞானவயல் வலைப்பூ 2012 ம் ஆண்டு ஜனவரி 22 ம் தேதி நாட்குறிப்புகள் எழுதி வைக்கலாம் எனத் துவக்கப்பட்டு குறிப்பிட்ட உறவினர்கள், நண்பர்களுக்காக என இன்றுவரை 11 ஆண்டுகள் 5 மாதங்களாக தொடர்வது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. நடுவில் 6 ஆண்டுகள் மிக குறைவான பதிவுகளே இடப்பட்டன. முகநூல், வாட்ஸ் அப் முக்கியத்துவம் பெற்றதால் இந்த வலைப்பூவிற்கு வருபவர்கள் குறைந்ததுவும் ஒரு காரணம்.

இந்த மே 2023 மாதம் மட்டும் நான் இட்ட பதிவுகள் மொத்தம் 157 மே மாதம் மாத்திரம் ஞானவயலுக்கு வந்து பார்வையிட்டவர்கள் 2608 பேர்கள்.

நேற்று மாத்திரம் ( 31-5-23 ) ஞானவயலுக்கு வந்தவர்கள் 146 பேர்கள்.

இந்த பதினொன்றரை ஆண்டுகளில் இட்ட பதிவுகள் மொத்தம் 4964. ( அடுத்த வாரம் 5000மாவது பதிவு ) 

இதுவரை ( UPTO 31st MAY 23 )ஞானவயலுக்கு வந்து பதிவுகளை  படித்தவர்கள் மொத்தம் 226331 

விகடனில் ஞானவயல் பற்றி ஆகஸ்ட் 2012 ல் சொல்லப்பட்டுள்ளது. இது  தொடர்பாக படிக்க இங்கே சொடுக்கவும்.

ஞானவயலில் இதுவரை அரசியல், சினிமா, ஜோதிடம் மற்றும் முரணான விவரங்கள் தரப்படவில்லை.

இந்த வலைப்பூவினைப் பார்வையிட்ட முகம் தெரியாத அன்பர்கள் பலர் நன்றி தெரிவித்து மெயில் அனுப்பியுள்ளனர். 

இதில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான பதிவுகள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை.  சில பதிப்புரிமை பெற்றதாக இருக்கலாம். எல்லோருக்கும் நன்றி.

என் ஒரே ஏக்கம் - கடந்த பல ஆண்டுகளாக  பதிவுகளுக்கு கமெண்ட்ஸ் என ஒன்று கூட வரவில்லை. 

இனியாவது வருமா?

எல்லோருக்கும் மறுபடியும் நன்றி கூறி இப்பதிவினை நிறைவு செய்கின்றேன்.

No comments:

Post a Comment