Sunday 27 August 2023

தமிழ்

 


மகுடேசுவரன் என்பவர் எழுதிய பெயர் வைக்கும் பேறு என்ற கட்டுரை விகடன் தடம் ஜீலை 2016 இதழில் வெளிவந்தது. அவர் அக்கட்டுரையில் சொல்லியுள்ள செய்திகளை சுருக்கமாக பார்க்கலாம்.



 பெயர்ச்சொற்கள் தாம் தமிழுக்குள் கலந்தனவேயன்றி வினைச்சொற்களில்அவ்வளவாக கலப்பேற்படவேயில்லை.

   தமிழ் மக்கள் பிற மொழிகளில் பெயர் வைப்பதற்கு முக்கியமான காரணம், பெயா்களுக்கான பொருளை பற்றி கண்டு கொள்வதில்லை, அதற்கு காரணம் நம் மக்களுக்கு சொல்லறி வேயில்லை.

  மேலும் தற்போது நாள்தோறும் புதிய, புதிய தொழில்நுட்ப சொற்கள் வந்து மக்களிடம் புழங்க ஆரம்பித்து விடுவது.

4   பிற பொருளில் வரும் அன்றாட வழக்காற்று சொற்களும், உரிய வகையில் தமிழாக்கப்படவில்லை.

5.    ஒரு மொழி வாழ்வது அன்றாடப் பயன்பாட்டில் வாய்மொழியாய் வழங்கப்படும் சொற்களில்தான்.


மகுடேசுவரன் தமிழ்படுத்திய சில அன்றாடம் புழங்கும் தொழில் நுட்ப வார்த்தைகள். செல்போன் கைபேசி என்றும், பேஸ்புக் முகநுால் என்றும், கூரியா் துாது அஞ்சல் எனவும் அழகாக புழங்கி வருவதை போல கீழ்கண்டவற்றையும் நாம் பயன்படுத்தி நடைமுறைப்படுத்தலாம்.

சிம் கார்டு – அழைதகடு

செல்பி – தற்படம்

குரூப்பி – தம்படம்

செல்பி ஸ்டிக் – தற்படக்கோல்

இயர்போன் – காதணிபாடி

சார்ஜர் – மின்னேற்றி

பவர் பேங்க் – மின்தேக்கி

புரொஜக்டா் – ஒளிபெருக்கி

வாட்ஸ்அப் – என்வினவி

No comments:

Post a Comment