Monday 28 August 2023

வரலாறு படிப்பதால் எற்படும் நன்மைகள் என்ன?

தமிழில் சரித்திர கதைகள் எழுதி புகழ்பெற்ற சாண்டில்யன் 
அவர்களின் வார்த்தைகளில் இதற்கான பதிலை கேட்போம் -
சாண்டில்யனின் முக்கிய படைப்புகளில் ஒன்றும், பாண்டியர்களின் கதையை சொல்லும் நாவலுமான ராஜமுத்திரை பாகம் 1-ல் கதாநாயகி இளநங்கை தன் தந்தையிடம் இவ்வாறு கேட்கிறாள்?
”பண்டைக்கால சரித்திரமா? அதைப்பற்றி இப்பொழுது என்ன? நிகழ்காலத்திற்கும், அதற்கும் என்ன சம்பந்தம்?”
அதற்கு அவர் தந்தையின் வாயிலாக சாண்டில்யன் கூறும் பதில்,
”பெண்னே, முட்டாள்கள் கேட்கும் கேள்வி இது. பண்டைக்காலம் இல்லாமல் நிகழ்காலம் ஏது? சரித்திரமில்லாமல் சமூக வளர்ச்சி ஏது?
மிருகங்களுக்கும், மனிதர்களுக்கும் ஒரு வித்தியாசம்தான் இருக்கிறது மகளே, அதுதான் வரலாறு, 
மனிதன் சரித்திரங்களையும், சம்பவங்களையும் சிருஷ்டித்திருக்கிறான். அவை ஒரு சங்கிலித்தொடராக ஆண்டுகளில் வளர்ந்து கொண்டே போகின்றன. அறிவாளியாயிருப்பவன் அதன் ஆதியையும் பார்க்கிறான். தானிருக்கும் அன்றைய நிலையையும் பார்க்கிறான். அந்த பழைய பெருமைக்கு தன்னை வளர்த்துக்கொள்ளப்பார்க்கிறான். அந்த வளர்ச்சியில் பழைய குறைகளை நிவர்த்தித்துக்கொள்ளவும் முயலுகிறான். சரித்திரம் இதற்கு உதவுகிறது. 
சரித்திரம் இதற்கு மட்டுமல்ல உதவுவது மகளே, சரித்திர நிகழ்ச்சிகளை வைத்து புலவர்கள் காப்பியங்களை இயற்றியிருக்கிறார்கள், இல்லையேல் இந்நாட்டிற்குச் சிலப்பதிகாரம் ஏது? கலிங்கத்துப்பரணிதான் ஏது? சாித்திர நோக்கில் அறிவு விசாலப்படுகிறது. இலக்கியம் மலா்கிறது. வேறெதிலும் இலக்கியம் மலருவதில்லை.
இவைகளும் வரலாற்றை பயிலுவதால் ஏற்படும் நன்மைகளுள் ஒன்றாகும். 

No comments:

Post a Comment