Saturday, 27 December 2025

திருநெவேலிக்காரரை திருக்குறளுக்கு உரை எழுதச் சொன்னால்....




திருநெவேலிக்காரரை திருக்குறளுக்கு உரை எழுதச் சொன்னால் எப்புடி இருக்கும் டே.......


1) கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத்தக.

*பொருள்: ஏலே.. மூதி ஒழுங்காப்படி. பொறவு நல்ல பிள்ளேன்னு பேரு வாங்கு..அது போதும்ல.*

*+++++++++++++++++*

2) மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து.

*பொருள்: அனிச்சம்பூ இருக்குல்லா. அத மோந்தாலே வாடிப்போகும் பாத்துக்க. வீட்டுக்கு விருந்தாளி வந்தாகன்னு வையி..ஓம் மொகரைக்கட்டை போற போக்கை வச்சே கண்டு பிடிச்சுருவாம்.. (சவத்து மூதிக்கு நாம வந்தது பிடிக்கல போல)*

*+++++++++++++++++*

3) இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று

*பொருள்: அழகு போல பழம் கனிஞ்சு இருக்கறப்ப எவனாச்சும் காயத் திம்பானா வே.. மனுசன்னா வாயில நல்ல வார்த்தை வரணும்..சும்மா மானாங்கன்னியா பேசக்கூடாது ஆமா*

*+++++++++++++++++*

4) புறம் கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்

அறம் கூறும் ஆக்கம் தரும்.

*பொருள்: அவனுக்குப் பின்னால ஆயிரம் பொறணி பேசுற.. நேருல பாத்தா கூழைக் கும்பிடு போடுறே.. மூதி இதெல்லாம் ஒரு பொழப்பால...சவம்..செத்துத் தொலையேம்ல..*

*+++++++++++++++++*

5) சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்.

*பொருள்: நீ வாயால வடை சுடாத மாப்ள.. சொன்னமாதிரி செய்யேம் பாப்போம்..*

நன்றிகள் - P Baskar Uadangudi

No comments:

Post a Comment