Saturday, 27 December 2025

ஹெல்மெட் காமெடி

  

போலீஸ் - சொல்லும்மா! உன் செயினை!;யாரு பறித்தது

பெண்மணி - கருப்பு ஹெல்மெட் பொட்டுநிருந்தவன் சார்!

போலீஸ் - வண்டியை அவன் தான் ஓட்டினானா?

பெண்மணி - வண்டியை ஒட்டினவன் பச்சை ஹெல்மெட் போட்டு இருந்தான்!

போலீஸ் - இதை யாராவது பார்த்தார்களா

பெண்மணி - சிவப்பு ஹெல்மெட் போட்டு இருந்த இன்னொரு வண்டிக்காரன் பார்த்தார் சார்!

போலீஸ் - இப்படி சொன்னால் எப்படி ! வேற யாராவது பார்த்தார்களா?

பெண்மணி - ஆமா சார்! அந்த வண்டியில் பின்னாடி உட்கார்ந்து இருந்த ஒரு பெண் பார்த்தார்கள்!

போலீஸ் - சரி அந்த பெண்ணை நீங்கள் அடையாளம் காட்ட முடியுமா?

பெண்மணி - இல்லை சார்! அவங்களும் வெள்ளை ஹெல்மெட் போட்டு இருந்தாங்க!

போலீஸ் - என்னம்மா நீங்க! எல்லாரும் ஹெல்மெட் போட்டு இருந்திருக்காங்க என்றால் அப்ப யார் தான் ஹெல்மெட் போடலை!

பெண்மணி - நான் மட்டும் தான் சார்!

போலீஸ் - அப்ப முதல்ல ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டியதற்கு fine கட்டுங்க. அப்படியே உங்க டிரைவிங் லைசென்ஸ், ஆர் சி புக் , இன்சூரன்ஸ் எல்லாம் கொடுங்க!

No comments:

Post a Comment