- அண்ணே ஒரு பாக்கெட் சால்ட்...உப்பு கொடுங்க
- நேற்று ரோட்டின் நடு...சென்டர்ல தான் வண்டியை ஓட்டி கொண்டு போனேன்!
- அம்மா! எங்க போற! அட சாமான் வாங்க நம்ம அன்னாசி ஷாப்பு...கடைக்கு தான்
- அம்மா என் புக் எங்க மேல்...டாப் ஷெல்ப்ல இருக்கு பார் !
- என்னங்க காய்கறி வாங்கும்போது நல்ல கிரீன்...பச்சையா பார்த்து வாங்குங்க!
- அம்மா அந்த வண்டி சாவியை தூக்கி போடுங்க ! இந்தா கேட்சு...பிடி!
- கடைக்காரர் ஒரு கோடு போட்ட பேப்பர்...தாள் கொடுங்க !
- பாருடி அந்த ஹீரோயின் என்னம்மா டான்ஸ்...ஆடுறா
- எனக்கு தெரியும் பட்...ஆனா மறந்து போச்சு!
- டேய் ! ஹார்லிக்ஸ் கலந்து வைத்து இருக்கேன் மிச்ச...பேலன்ஸ் வைக்காம குடி பார்ப்போம்!
- எல்லாரும் ஒழுங்கா கியூ...வரிசையில் நில்லுங்க!
- அம்மா எனக்கு ஜுஸ் கண்ணாடி...கிளாஸ் ல கொடுங்க!
- அடியே கேட்டு...கதவ ரொம்ப நேரமா யாரோ தட்டி கிட்டு இருக்காங்க பாருன்!
- அம்மா இங்க தான் வச்சேன் எங்க அந்த பின்...ஊசி!
- சார் அந்த முக்கு...கார்னர் திரும்பி நேரா போங்க! கோவில் வந்து விடும்!
- எந்த போஸ்ட்...கம்பம் பார்த்தாலும் நம்ம நாய் விட மாட்டிக்குது
- டேய் ரோட்டில் நடந்து போகும்போது சைட்...ஓரம் நல்லா பார்த்து போ!
- கடைக்காரரே மொத்த...டோட்டல் எம்புட்டு என்று சொல்லுங்க !
- அண்ணே! இதில் நாலு ஜெராக்ஸ்...காப்பி போட்டு கொடுங்க !
போதும் டா லிஸ்ட் பெருசா போகுது!

No comments:
Post a Comment