Saturday, 27 December 2025

கிரிக்கெட்

1. கையில Ball-ஐ வெச்சுகிட்டே No Ball-ன்னு சொல்வாங்க.,

2. ஒரு Over-க்கு ஆறு Ball-ன்னு சொல்வாங்க., ஆனா ஒரு Ball தான் இருக்கும்.

3. All Out-ன்னு சொல்லுவாங்க.., ஆனா 10 பேர் தான் Out ஆகி இருப்பாங்க..

4.அம்பயர் ஒரு கைய தூக்கினா ஒரு Batsman அவுட்.., ரெண்டு கையயும் தூக்கினா Six.. ( லாஜிக் இடிக்குதே..!! )

5. Goal Keeper-ன்னா கோல் விழாம தடுக்கணும்.. அப்ப.., Wicket Keeper விக்கெட் விழாம தடுக்கணும்தானே?. ஆனா அவரே ஏன் Out பண்ணுறாரு..?

6. சில ஒவர் மட்டும் Powerplay-னு சொல்றாங்களே.. அப்போ, மீதி ஒவர் எல்லாம் பவர் இல்லாம இருட்டிலயா விளையாடுறாங்க??

7. ஒருத்தரை மட்டும் Night Watchman-னு சொல்வாங்க.. ஆனா அவரும் மேட்ச் முடிஞ்சா - Ground-ஐ காவல் காக்காம ரூம்க்கு தூங்கப் போயிடுவாரு..

8. Tea Break-னு சொல்வாங்க..ஆனா கூல் ட்ரிக்ஸ் தான் குடிப்பாங்க..

9. என்னதான் எல்லா பக்கமும் Light எரிஞ்சாலும்., ஒரு பக்கத்தை மட்டும் “OFF ” Sideனு தான் சொல்வாங்க..

10.ஆட்டம் முடிஞ்ச உடனே ஒருத்தரை மட்டும் தான் ” Man of the Match “-ன்னு சொல்லுறாங்க.. அப்ப மீதி பேரெல்லாம் Women-ஆ..?. சொல்லுங்கள்.

முகநூலில் படித்தது!

இருங்க இன்னும் கொஞ்ச இருக்கு! கருத்து பகுதியில் கருத்தா சிலர் பதிவிட்டு இருக்காங்க! அதையும் படித்து விட்டு போங்க!

  1. மிகவும் சிரமபட்டு ஓடிபோய், டைவ் அடித்து விழுந்து ஒருவன் கேட்ச் பிடிப்பான் ஆனால் பந்து போட்டவன் கணக்கில் விக்கெட் சேரும்.
  2. இது பரவாயில்ல பேட்ஸ்மேன் குறிப்பிட்ட நேரத்திற்குள் கோட்டை தொடவில்லையென்றால் ரன்னுக்கே அவுட் கொடுத்து விடுகின்றனர் கேட்டால் ரன்அவுட்டாம்
  3. கிரிக்கெட் விழையாட்டு என்று சொல்லி விட்டு.... கடைசி வரை விழையாடுவதில்லை.....
  4. சிகப்பு பந்தில் பால் போட்டலும்சில நேரம் "வைட்பால் " எண்டு தான் சொல்லுறாங்க

No comments:

Post a Comment