Wednesday 14 September 2016

பிட்ஸ்பர்க் - 1 5 KM Run

பிட்ஸ்பர்க் அமெரிக்காவில்  பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள நகரமாகும்.  Steel  city என்றும் அழைக்கப் படுகின்றது. மூன்று ஆறுகள் இங்கு ஓடுகின்றன. கொடைக்கானல் போல் மலைப்பிரதேசமாக அழகாக அமைந்திருக்கின்றது.

செப்டம்பர் 10ம் தேதி எங்கள்  திருமண நாளை நயாகராவில் கழிக்க தீர்மானித்திருந்தோம். ஆனால் வானிலை அறிக்கைபடி அன்று நயாகராவில் இடி, மழை எனப் போட்டிருந்ததால் 10ம் தேதி பிட்ஸ்பர்க் நகரில் எங்கள் உறவினர் Ms ஆஷா வீட்டில் தங்கி பிறகு 11ம் தேதி நயாகரா என திட்டம்  மாற்றப் பட்டது. இந்த மாற்றம் மகிழ்ச்சிகரமாகவே  அமைந்தது.

பிட்ஸ்பர்க் நகர் இந்திய சங்கங்கள் ஒன்றிணைந்து ஆண்டுதோறும் ஒரு நாள் நிதி திரட்டி  சேவை மையங்களுக்கு வழங்குகின்றார்கள். இந்த ஆண்டு செப். 10 தேதி 5 கி.மீக்கு நடை, ஓட்டம் மற்றும் ஹோலி போன்று கலர் சாயம் தெளித்தல் என்று அமைத்து நிதி திரட்டினார்கள். ஆஷாவின் தயவால் நாங்களும் இந்த நடை/ஓட்டத்தில் கலந்து கொண்டோம்.

திருமண நாள் காலையில் 9-00 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறும் நார்த் பார்க் என்ற இடத்தில் ஒரு அழகான ஏரியைச் சுற்றி அமைந்துள்ள மலைப் பாதையை அடைந்தோம்.

500க்கும் மேலான இந்தியர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். எல்லோருக்கும்  T  shirt , தண்ணீர் பாட்டில், பழங்கள் எனக் கொடுத்து 9-30க்கு நடை /ஓட்டத்தை ஆரம்பித்தனர். 5 கி.மீ. தூரத்தை ஓடி முதலில் வருபவர்களுக்கு பரிசுகள் அறிவித்திருந்தனர்.

நாங்கள் ( ஆஷா, மாலா, ஸ்ரீ மற்றும் நான் ) பேசிக்கொண்டே நடக்க ஆரம்பித்தோம். வழியில் எங்கள்  மேல் சாயம் பூசவும், கலர் தண்ணீர் அடிக்கவும் ஆங்காங்கே அன்பர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். நாங்கள் பேருக்கு முகத்தில் மாத்திரம் சில வண்ணங்களைப் பூசிக்கொண்டு .நடந்தோம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த  நிகழ்ச்சிக்கு  வெங்கடேஷ்வரா கோவில், சின்மயா மிஷன், TCS, CEI   போன்ற நிறுவனங்கள் sponsor செய்திருந்தன.

5 கி.மீ. தூரத்தை நாங்கள் மெதுவாக நடந்து ஒரு மணி நேரத்தில் நிறைவு செய்தோம். நம்மூர் மக்களை நிறைய பார்க்க முடிந்தது.

இந்த ஆண்டு மண நாள்  மகிழ்ச்சியாகவே  துவங்கியுள்ளது. இதை அழகாக அமைத்துக் கொடுத்த 
ஆஷாவிற்கு மிக்க நன்றி

T  shirt போட்டுக் கொண்டு நடக்க ரெடி..

( ஸ்ரீ, மாலா, ஆஷா & ஜேபி  - selfie )
( கன்னத்தில் சாயத்துடன்  இன்னொரு  selfie  )

வழியில் போட்டோவுக்கு போஸ் 

அப்பாடா... பாதி  தூரம் நடந்தாகிவிட்டது..

2 comments:

  1. Nice to see that you are enjoying your stay in US. Is that Monongahela river in the back ground in few of your photos ?

    ReplyDelete
    Replies
    1. It is a small lake...we walked around this lake.

      Delete