செப். 11ம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை நயாகராவிற்கு புறப்பட்டு நீர்வீழ்ச்சி பார்த்துவிட்டு அன்று இரவே பிட்ஸ்பர்க் திரும்பினோம்.
அடுத்த நாள் திங்கட்கிழமை ப்ரவீண் - ஆஷா தம்பதியருடன் ஆன்மீக விஷயங்களை பகிர்ந்து கொண்டோம். அவர்களுக்கு எளிய முறை உடற் பயிற்சி சொல்லிக் கொடுத்தோம்.
அவர்கள் வீட்டைச் சுற்றி walking சென்று வந்தோம். அழகான, சுத்தமான, இதமான சூழ்நிலை...Fall பருவம் ( autumn season ) ஆரம்பிக்கும் வேளை...மரத்திலுள்ள இலைகள் பல்வேறு நிறங்கள் மாறி உதிரும் காலம் தொடங்குகின்றது. அடுத்த மாதம் பார்த்தால் இலைகள் நிறம் மாறி மஞ்சள், ஆரஞ்சு, சிகப்பு, பழுப்பு எனப்பார்க்குமிடமெல்லாம் மரங்கள் அழகாக தோன்றுமாம். அதுவும் பிட்ஸ்பர்க் அழகாகக் காட்சி தருமாம்.
அடுத்த மாதம் அது பற்றி எழுதுகிறேன்...
![]() |
ஆஷா வீட்டிற்கு முன்னால் |
![]() |
பக்கத்து சாலையில் |
![]() |
நிறம் மாறிக்கொண்டிருக்கும் மேப்பிள் மரத்தருகில் |
![]() |
ஆஷா வீட்டு ஜன்னலுக்குப் பின் அழகான red cardinal bird |
பிட்ஸ்பர்கில் எங்கள் மண நாள் கொண்டாட்டம் மற்றும் பல மகிழ்ச்சியான தருணங்களை ஏற்படுத்திக் கொடுத்த ப்ரவீண் - ஆஷா தம்பதியினருக்கு நன்றி...நன்றி..நன்றி!
அடுத்து நயாகரா...
No comments:
Post a Comment