"ஞானவயல் " வலைப்பூவின் 11111 பதிவு இது. இந்த எண் தேவதை எண் ( Angel Number ) என சொல்லப்படுகின்றது. ஆன்மீக விழிப்புணர்வு தரும் எண்ணாக இது கருதப்படுகின்றது.
எனவே இந்த 11111 எண்ணில் வரும் இப்பதிவில் மகரிஷி பற்றி
ஒரு நிகழ்ச்சியும், அவர் எழுதிய கடிதம் ஒன்றினையும் இங்கு பதிவிட்டுள்ளேன் -
ஒருமுறை மகரிஷி அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது தனது பெற்றோர்களைப் பற்றி
" என் அம்மாவை கொஞ்சம் வசதியாகப் பார்த்துக்கொண்டேன். ஆனால் அப்பாவிற்கு என்னால் ஒன்னும் செய்யமுடியலே. கடைசி வரைக்கும் வறுமையிலே வாழ்ந்தாரு " என்று சொல்லி தன் அப்பாவை நினைந்து குலுங்கி,குலுங்கி அழ ஆரம்பித்துவிட்டார்கள். மேலும் அவரால் பேச முடியவில்லை. அவரது உதவியாளர் அவரது முதுகினைத் தடவிக் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார்கள்.
இதுபோல தன் அன்பு மனைவி அன்னை லோகாம்பாள் அவர்களைப் பற்றி சொன்னவற்றை பிறகு பதிவிடுகின்றேன்.
No comments:
Post a Comment