Showing posts with label மகரிஷி அவர்களுடன்.... Show all posts
Showing posts with label மகரிஷி அவர்களுடன்.... Show all posts

Monday, 30 June 2025

மகரிஷி அவர்களுடன்.,.....27


மகரிஷி அவர்கள் எழுதிய இருபதுக்கும் மேற்பட்ட கடிதங்களில் பலவற்றை இங்கு பதிவிட்டுள்ளேன்.

கீழ்காணும் கடிதம்  நான் அவருக்கு அனுப்பிய கடிதத்தின் இணைப்பிலேயே பதில்  அளித்த ஒன்றாகும்.

1993ம் ஆண்டு ஜனவரி  25ம் தேதியில் பொதுநிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தோம். அந்நிகழ்ச்சியில் மகரிஷி அவர்களை எந்த தலைப்பில் பேச சொல்லலாம் என பலவாறாக சிந்தித்து " இறைவன் என்பது உண்மையில் எது " என்ற தலைப்பினை தேர்ந்தெடுத்து அதனை வெகு அழகாக ஒரு தாளில் எழுதி என் கடிதத்தோடு இணைத்து அனுப்பியிருந்தேன். மகரிஷி அவர்கள் அந்த தாளினிலேயே தனது ஒப்புதலை வழங்கிய கடிதம்தான் இது. 
 
2500 அன்பர்களுக்குமேல் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சி மகரிஷி அவர்களுக்கு மட்டற்ற நிறைவினைத் தந்தது. 
நாங்கள் தந்திருந்த தலைப்பினைப் பற்றி பலமுறை பாராட்டினார்கள்.                    
" நீங்களும், உங்கள் அன்பர்கள் காட்டிய ஆர்வமும் இறையுணர பிரம்மஞானப் பயிற்சி தருவதற்கான  நேரம் வந்துவிட்டதாக உணர்கிறேன்" என்றார்கள். 

சிறப்பாக நடைபெற்ற பொதுநிகழ்ச்சி பற்றி ஏற்கனவே பதிவிட்ட இரண்டு பதிவுகளை படிக்க        click here


இந்த பதிவு ஞானவயலின் 20000மாவது பதிவாக அமைந்தது மிகவும்   மகிழ்ச்சியைத் தருகின்றது. 

                                      
BLOG PAGEVIEWS NEARING 0.7 MILLION

Thursday, 11 July 2024

மகரிஷி அவர்களுடன்.......21


"ஞானவயல் " வலைப்பூவின்    11111 பதிவு இது. இந்த   எண் தேவதை எண்     ( Angel Number ) என சொல்லப்படுகின்றது. ஆன்மீக விழிப்புணர்வு தரும் எண்ணாக இது கருதப்படுகின்றது.

எனவே இந்த 11111 எண்ணில் வரும் இப்பதிவில் மகரிஷி பற்றி 
ஒரு நிகழ்ச்சியும், அவர் எழுதிய கடிதம் ஒன்றினையும் இங்கு பதிவிட்டுள்ளேன்  - 

ஒருமுறை மகரிஷி அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது தனது பெற்றோர்களைப் பற்றி 
" என் அம்மாவை கொஞ்சம் வசதியாகப் பார்த்துக்கொண்டேன். ஆனால் அப்பாவிற்கு என்னால் ஒன்னும் செய்யமுடியலே. கடைசி வரைக்கும் வறுமையிலே வாழ்ந்தாரு " என்று சொல்லி தன் அப்பாவை நினைந்து குலுங்கி,குலுங்கி அழ ஆரம்பித்துவிட்டார்கள். மேலும் அவரால் பேச முடியவில்லை. அவரது உதவியாளர் அவரது முதுகினைத் தடவிக் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார்கள்.
இதுபோல தன் அன்பு மனைவி அன்னை லோகாம்பாள் அவர்களைப் பற்றி சொன்னவற்றை பிறகு பதிவிடுகின்றேன்.

கீழ்கண்ட கடிதத்தில் உடல் நலமற்றிருந்த தன் மனைவி பற்றி குறிப்பிட்டுள்ளார்கள் -