Tuesday, 1 August 2023

மகரிஷி அவர்களுடன்............3 ( 1000th POST OF THIS YEAR 2023)


கடந்த மகரிஷி அவர்களுடன் - 2 ல் (இதனைப் படிக்க இங்கே சொடுக்கவும் )  மகரிஷி அவர்களின் கடிதத்தில் கண்டபடி பெல் பகுதிக்கு 25-01-1993 அன்று நிகழ்ச்சி நடத்த திருவாரூரிலிருந்து கிளம்பி தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்திவிட்டு 24-01-93 மாலை பெல்  நகரியத்திற்கு வருகை தந்தார்கள். அன்று இரவு முழுதும் அன்பர்களுடன் கலந்துரையாடினார்கள். மாலாவும் பற்பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்தாள். மகரிஷி அவர்களும் மிகவும் மகிழ்ச்சியாக, நகைச்சுவையுடன் பதிலளித்தார்கள்.

அடுத்த நாள் ( 25-01-1993) M D அரங்கத்திற்குள் ஏற்பாடுகளைக் கவனிக்க நான் சென்றுவிட்டேன்.   கிட்டத்தட்ட  1500   பேர்கள் அமரக்கூடிய ஆடிட்டோரியம். 
மாலை நான்கு மணிக்கே பாதி அரங்கம்  நிரம்பிவிட்டது. நிகழ்ச்சி துவங்கியபோது 2500 அன்பர்களுக்குமேல்  வந்து அரங்கம் நிரம்பி வழிந்தது. ( 2500 அன்பர்களுக்குமேல் என்ற செய்தி பெல் நிறுவன  Intelligence Wing கொடுத்த தகவல்).  

" இறைவன் என்பது உண்மையில் எது? " என்ற தலைப்பில் மகரிஷி ஆற்றிய உரை வந்திருந்த அன்பர்களுக்கு மனதில் பதியும்படி எளிமையாக இருந்தது. பெரும்பாலான அன்பர்கள் முதன்முறையாக மகரிஷி அவர்களை தரிசித்து நிறைவு பெற்றதும் காண முடிந்தது.

நிகழ்ச்சி முடிந்ததும் " ஆழியாருக்குப் பிறகு இங்கேதான் இவ்வளவு அன்பர்களைக் கண்டேன். அறிஞர்கள் நடத்தும் மன்றமல்லவா! " என எங்களை பாராட்டினார்கள்.

நிகழ்ச்சியின்போது  எடுத்த  போட்டோக்கள் சில கீழே - 









மாலாவின் முதல் மேடைப் பேச்சு 



" இறைவன் என்பது உண்மையில் எது? " என்ற தலைப்பில் மகரிஷி முப்பது ஆண்டுகளுக்கு முன் நிகழ்த்திய உரை  - ஆடியோ பதிவு  கீழே  - 


No comments:

Post a Comment