Monday, 30 June 2025

மகரிஷி அவர்களுடன்.,.....27


மகரிஷி அவர்கள் எழுதிய இருபதுக்கும் மேற்பட்ட கடிதங்களில் பலவற்றை இங்கு பதிவிட்டுள்ளேன்.

கீழ்காணும் கடிதம்  நான் அவருக்கு அனுப்பிய கடிதத்தின் இணைப்பிலேயே பதில்  அளித்த ஒன்றாகும்.

1993ம் ஆண்டு ஜனவரி  25ம் தேதியில் பொதுநிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தோம். அந்நிகழ்ச்சியில் மகரிஷி அவர்களை எந்த தலைப்பில் பேச சொல்லலாம் என பலவாறாக சிந்தித்து " இறைவன் என்பது உண்மையில் எது " என்ற தலைப்பினை தேர்ந்தெடுத்து அதனை வெகு அழகாக ஒரு தாளில் எழுதி என் கடிதத்தோடு இணைத்து அனுப்பியிருந்தேன். மகரிஷி அவர்கள் அந்த தாளினிலேயே தனது ஒப்புதலை வழங்கிய கடிதம்தான் இது. 
 
2500 அன்பர்களுக்குமேல் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சி மகரிஷி அவர்களுக்கு மட்டற்ற நிறைவினைத் தந்தது. 
நாங்கள் தந்திருந்த தலைப்பினைப் பற்றி பலமுறை பாராட்டினார்கள்.                    
" நீங்களும், உங்கள் அன்பர்கள் காட்டிய ஆர்வமும் இறையுணர பிரம்மஞானப் பயிற்சி தருவதற்கான  நேரம் வந்துவிட்டதாக உணர்கிறேன்" என்றார்கள். 

சிறப்பாக நடைபெற்ற பொதுநிகழ்ச்சி பற்றி ஏற்கனவே பதிவிட்ட இரண்டு பதிவுகளை படிக்க        click here


இந்த பதிவு ஞானவயலின் 20000மாவது பதிவாக அமைந்தது மிகவும்   மகிழ்ச்சியைத் தருகின்றது. 

                                      
BLOG PAGEVIEWS NEARING 0.7 MILLION

No comments:

Post a Comment