உலகின் முதல் விமானத்தை பயன்படுத்தியவர் இலங்கை தமிழ் மன்னன் ராவணன்...
உலகில் முதல் விமானத்தை உருவாக்கிய பெருமை ரைட் பிரதர்ஸை தான் சேரும் என்று ஆங்கிலேயர்கள் கூறும் தகவல் பொய்யானது என்றும், 5000 வருடங்களுக்கு முன்னரே உலகின் முதல் விமானத்தைப் பயன்படுத்தியவர் இலங்கை தமிழ் மன்னர் தான் என்பதற்கான ஆதாரம் தற்பொழுது கிடைத்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இராவணன் பறக்கும் விமானத்தை வைத்திருந்தாரா?
5000 வருடங்களுக்கு முன்னர் ராமனின் மனைவி சீதாவை இலங்கையின் தமிழ் மன்னன் இராவணன் பறக்கும் படகில் கடத்தி சென்றார் என்று சங்ககால புராணங்களில் குறிப்பிடப்பட்டிருப்பது பலருக்கும் தெரிந்திருக்கக் கூடிய விஷயமாகவே இருக்கிறது. ஆனால், உண்மையில் அந்த காலகட்டத்தில் இராவணன் அப்படியான ஒரு பறக்கும் படகை, அதாவது விமானத்தை வைத்திருந்தாரா என்பதற்கான சரியான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்காமலிருந்து வந்தது.
ஆனால், தற்பொழுது இலங்கையில் தமிழ் மன்னன் இராவணன் தொடர்பில் புதிய கண்டுபிடிப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. சமீபத்தில் வெளியான செய்திக் குறிப்பில் இலங்கைத் தமிழன் இராவண மன்னன் தான் முதல் முதலில் விமானத்தைப் பயன்படுத்தியவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை நிரூபிக்கக்கூடிய ஆதாரம் கிடைத்துள்ளது என்றும் இலங்கை தெரிவித்துள்ளது.
சமீபத்தில் வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பது, 'இராமாயண காலத்தில் இலங்கையின் ஆட்சியாளராக இருந்த இராவணனை இந்தியாவில் இந்துக்கள் ஒரு அரக்கனாகவே கருதுகின்றனர். ஆனால், இராவணன் மன்னன் என்பவர் பல புதிர்களைக் கொண்ட அசாதாரணமான நபர் என்றும், இவர் ஒரு சிறந்த மன்னன் என்றும், அவர் நாட்டில் பலருக்கும் முன்னோடியாகக் காணப்பட்டவர்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் முதல் AR வெளியீட்டு நிகழ்வில் OnePlus நோர்ட் ஜூலை 21 தேதி அறிமுகம்!
இலங்கை அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு:
இலங்கை அரசாங்கம் அண்மையில் இராவணனைப் பற்றி ஏதாவது ஆவணங்கள் இருந்தால் உடனடியாக அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளுமாறு அறிவித்திருந்தது. சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகத்தால் வெளியிட்ட செய்தித்தாள் விளம்பரத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டது. புராண மன்னர்கள், இழந்த பாரம்பரியம் மற்றும் நாட்டின் விமான ஆதிக்கம் குறித்த ஆராய்ச்சியை அந்நாடு மேற்கொள்ளவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சங்ககால ஆவணங்கள் அல்லது புத்தகங்கள் அல்லது ஆதாரங்கள் என்று கருதப்படும் எந்த ஒரு தகவலாக இருந்தாலும் உடனே அரசாங்கத்திடம் பகிர்ந்து கொள்ளுமாறு அந்நாட்டு மக்களிடம் வேண்டுகோள்விடுக்கப் பட்டுள்ளது. இதன்படி, 5000 வருடங்களுக்கு முன்னர் உலகின் முதல் விமானத்தைப் பயன்படுத்தியவர் இராவணன் தான் என்று இலங்கை அரசாங்கம் நம்புவதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இராவணன் அந்த காலத்திலேயே விமானத்தைப் பயன்படுத்தியிருந்தார் என்பதையும், அதைப் பயன்படுத்தி வானத்தில் பறந்திருக்கிறார் என்பதையும் நிரூபிக்கக் கூடிய ஆதாரங்களை இலங்கை அரசாங்கம் தற்பொழுது சேகரித்துள்ளதாக இலங்கை அதிகாரி தெரிவித்துள்ளார். தங்களுக்குக் கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்து அடுத்த 5 ஆண்டுகளில் இந்த தகவல் உண்மை என்று நிரூபிக்கப்படும் என்றும் அவர் உறுதிபட கூறியுள்ளார்.
No comments:
Post a Comment