மனைவி மக்களோடு குடும்பத்தை நடத்திச் செல்லும் ஒருவர் சமூகத்தில் உள்ள தன் சொந்தங்கள், நண்பர்கள்,ஏழைகள் என்ற மூன்று பிரிவினருக்கும் உதவியாக இருப்பார். இது மட்டும் அல்ல துறவிகள், அன்றாடம் பசியோடு இருப்பவர்களுக்கும் குடும்பத்தலைவரே துணை.
ஒரு குடும்பத்தலைவர் சுற்றம் குடும்பம் இவர்களைக்கவனித்த பின்தான் தன்னைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.பழி பாவங்களுக்குப் பயந்து , தன்னிடம் உள்ளதை அடுத்தவர்களுக்கும் பங்கிட்டு வாழ்வதுதான் இல்வாழ்க்கை.
ஒருவர் தான் துறவுபூணுவதால் கிடைக்கும் நன்மையை மனைவி மக்களோடு இல்வாழ்க்கை வாழ்ந்தே அடைந்து விடலாம். ஏனென்றால் குடும்பம் நடத்தும் ஒருவர் துறவு வாழ்க்கை மேற்கொள்பவரை விட பொறுப்பும், சகிப்புத் தன்மையும் உடையவராக இருப்பார்.
அதனால் மானுட தர்மம் என்று சொல்வதே இல்வாழ்வுதான். ஆனால் அதற்காக துறவிகளை அவமதிக்காமல் இருப்பது நல்லது என ஆலோசனை கூறும் வள்ளுவர்
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்”
என்கிறார். அதாவது, உலகத்தில் வாழவேண்டிய முறைப்படி குடும்ப வாழ்க்கை நடத்தும் ஒருவர் வானத்தில் இருக்கும் தெய்வத்துக்குச் சமம் என்பதே இதன் பொருளாகும்
No comments:
Post a Comment