திருடன் ஒருவன் இரவில் சுவர் ஏறி குதித்தான்!
பெரிய நாய் ஒன்று நின்று கொண்டிருந்தது.
நாய் அவனை பார்த்தது அவன் நாயை பார்த்தான்!
நாய் குலைக்க வில்லை!
தைரியமாக இரண்டு அடி எடுத்து வைத்தான்! குலைக்க வில்லை!
வீட்டில் கதவருகே வந்தான் ! கள்ள சாவி கொண்டு கதவை திறக்க முற்பட்டான்!
நாய் அப்பொழுதும் குலைக்க வில்லை!
திடீர் என்று அவனுக்கு ஒரு சந்தேகம்! கதவை திறக்கும் போது நாய் குலைத்தால் என்ன செய்ய !
தயாராக வைத்திருந்த பிஸ்கெட் பாக்கெட்டில் இருந்து இரண்டு பிஸ்கட்டை
எடுத்து நாய்க்கு போட்டான்!
நாய் உடனே குலைக்க ஆரம்பித்து விட்டது!
திருடன் நாயை பார்த்து கேட்டான்!
ஏன் நாயே! நான் சுவர் ஏறி குதித்த போது குலைக்க வில்லை!
கதவு வரை நடந்த போது குலைக்க வில்லை!
வீட்டின் கதவை திறக்கும் போது குலைக்க வில்லை மாறாக உனக்கு பிஸ்கெட் போடும்போது குலைக்க ஆரம்பித்து விட்டயே என்று கேட்க அதற்கு நாய் இவ்வளவு நேரம் நீ உன் வேலையை செய்கிறாய் என்று நினைத்து கொண்டு
இருந்தேன்!
ஆனால் தேவை இல்லாமல் எனக்கு பிஸ்கெட் இலவசமாக நீ போடும்போது தான் நீ தவுறு செய்கிறாய் என்று அறிந்து கொண்டேன்.
இன்று எப்பொழுதெல்லாம் நமக்கு இலவசம் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் அரசு இயந்திரம் தவறு செய்கிறது என்று பொருள்!
புரிந்து கொள்ளுங்கள்!
No comments:
Post a Comment