Friday, 19 September 2025

காமெடி நடிகர் நாகேசும், எழுத்தாளர் ஜெயகாந்தனும்....

காமெடி நடிகர் நாகேசும், எழுத்தாளர் ஜெயகாந்தனும் நண்பர்கள் ஒரு சமயம் காரில் ஒரு கிராமத்தில் பயணம் செய்து கொண்டு இருக்க அப்ப ஒரு ரயில்வே லெவல் கிராசிங்கில் நிற்க வேண்டியதாகி விட்டது!

ரயில் வர நோம்ப நாழிகை ஆக!

போர் அடிக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று ஜெயகாந்தன் நாகேசிடம் கேட்க !

அதற்கு நாகேஷ் நீங்களே சொல்லுங்கள் என்று அவரிடம் சொல்ல !

ஜெயகாந்தன் வா அது வரை பிச்சை எடுக்கலாம் என்று சொல்ல!

நாகேஷும் சரி வாங்க என்று சொல்லி விட்டு சட்டை வேட்டியை கழட்டி வைத்து விட்டு வெறும் டவுசருடன் அங்கு உட்கார்ந்து பிச்சை எடுக்க ஆரம்பித்தனர்.

கொஞ்சம் நேரம் கழித்து பார்த்தால் ஜெயகாந்தனுக்கு நிறைய சில்லறை ஆனால் நாகேசுக்கு மிகவும் குறைவு!

காரில் வந்தவுடன் நாகேசை பார்த்து ஜெயகாந்தன் நக்கலாக சொன்னாராம்!

" பார்த்தாயா உன் நடிப்பை விட என் நடிப்பு தான் பிரமாதம்! என்று!

No comments:

Post a Comment