ஒரு நாள், இளைஞன் ஒருவன் ஒரு ஜென் குருவைச் சந்திக்க வந்தான்.
அவன் முகத்தில் சோர்வு, மனதில் குழப்பம் இருந்தது.
“என் வாழ்க்கை எதுவும் சரியில்லை,” என்றான்.
“வீட்டிலும் பிரச்சனை, வேலையிலும் பிரச்சனை, நண்பர்களும் புரிந்துகொள்வதில்லை.
இந்த உலகமே எனக்கு எதிராக இருக்கிறது!” என்றான்.
குரு அமைதியாக அவனை நோக்கி சிரித்தார்.
பிறகு மெதுவாக கேட்டார்:
“இத்தனை பிரச்சனைகள் இருந்தும்… நீ ஏன் இன்னும் உயிரோடிருக்கிறாய்? ஏன் சாகவில்லை"
அவன் திகைத்து நின்றான்.
பிறகு சற்றே நிதானமாகச் சொன்னான்:
“என் வாழ்க்கையில் சில நல்ல விஷயங்களும் இருக்கின்றன,
அவைதான் என்னை தாங்கி நிற்க வைக்கிறது.”
குரு சொன்னார்:
“அப்படியானால், இனி அவை பற்றி நினைக்க ஆரம்பி. அந்த நல்ல விஷயங்களுக்காக கடவுளுக்கு நன்றி சொல். அவற்றின் மீது நீ உன் மனதை வைத்து வாழ்ந்தால்,
இன்னும் பல நல்ல விஷயங்கள் உன் வாழ்வில் நடக்கும். அப்போது உன் வாழ்க்கை அதன் அர்த்தத்தை இழப்பதில்லை.
நீ அதை மறந்துவிட்டால் மட்டுமே அது எப்போதும் சோகமாகத் தெரியும்.” என்றார்.
No comments:
Post a Comment