Monday, 27 October 2025

எல்லாமே ஊமை குத்துங்க

 எல்லாமே ஊமை குத்துங்க 

ஒரு ஊரில் ஒரு நபரை என்ன காரணம் என்று தெரியாமல் கூட 3 பேர்கள் நன்றாக அவரைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தனர்...அடி வாங்கிக் கொண்டிருந்த நபரோ அவர்கள் அடித்த அடிகளுக்கு கூட கத்தாமல் அமைதியாக ஒவ்வொருவரிடமும் அடி வாங்கிக் கொண்டிருந்தார்...இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அந்த ஊருக்கு புதியதாக வந்த இளைஞர் ஒருவர் அவர்களை விலக்கிவிட்டு "அப்பாவி போல இருக்கும் இந்த மனுஷனைப் போட்டு இந்த அடி அடிக்கிறீங்களே இது உங்களுக்கே நியாயமா ? அடி வாங்குபவரை பார்த்து ஏண்டா இப்படி எருமை மாதிரி சொரணையே இல்லாம அடி வாங்கறீயே " நீ வாய் திறந்து கூட" அய்யோ அம்மான்னு கூட கத்த மாட்டியா " இவங்க எதுக்கு உன்னை அடிக்கிறாங்க ? ஏண்டா இப்படி ?' நீ என்ன தப்பு செய்ஞ்சே ?" என்றார்

அடி வாங்கிய ஆசாமியோ " அட போங்க சார்..இவங்க எல்லாருமே என் ப்ரெண்ட்ஸ் ..எங்களுக்கு பொழுது போகலேன்னா நாங்க ..இங்கே வந்து சும்மா ஜாலியா அடிச்சிக்குவோம்..அதுல யார் அதிகமா ஆதி வாங்கறாங்களோ அவங்க மட்டும் கத்த மாட்டோம்.. எங்களை யாராவது விலக்கி விட்டு சமாதானம் பண்ணினா நாங்க அவங்களையும் எங்க "அடி " விளையாட்டுல சேர்த்துக்கிட்டு குத்தோ குத்துன்னு குத்துவோம் . நான் ஏன் ? கத்தவில்லை தெரியுமா ? அவங்க என்னை அடிச்சி குத்தினது எல்லாமே ஊமை குத்துங்க " அட என்னப்பா பார்த்துக்கிட்டிருக்கீங்க..நம்ம ஆதி விளையாட்டுக்கு இன்னொரு ஆள் கிடைச்சாச்சு இந்த ஆள போட்டு அடிங்கப்பா...அவர்கள் நால்வரும் சேர்ந்து

அந்த ஆளை அடிக்க ஆரம்பிக்க அவரும் கத்தாமல் "அடி" வாங்கி கொண்டிருக்கின்றார்"""

No comments:

Post a Comment