சில நேரம் ஜோசியம் அட்வான்ஸ் ஆக வேலை செய்ய ஆரம்பிக்கிறது!!
அண்ணாச்சி காலண்டர்ல என்னோட விருச்சிக ராசிக்கு என்னப் போட்டிருக்கு...?
தண்டனைன்னு போட்டிருக்கு தம்பி....
நாம யார் வம்புக்கும் போறதில்ல தும்புக்கும் போறதில்ல நமக்கு யார் தண்டனை தரப்போறாங்க... எல்லாம் மூட நம்பிக்கை அண்ணாச்சி... சரி சரி நாம வந்த வேலையைபாப்போம்... ரெண்டு பால் பாக்கெட் கொடுங்க...
ரெண்டு பால் பாக்கெட் அப்புறம் தம்பி...
அப்புறம் ஒரு சின்ன விண்ணப்பம் அண்ணாச்சி...?
சொல்லுங்க தம்பி...!
எங்க வீட்டம்மா வந்து ரவா கேட்டா இல்லன்னு சொல்லிடுங்க அண்ணாச்சி...
நீங்க டூ லேட்டுங்க தம்பி...
ஏன் அண்ணாச்சி...
உன் வீட்டம்மணி நேத்து நைட்டே ரவய வாங்கிட்டு நான் ரவ வாங்குனத எங்க வீட்டுகாரர்ட்ட சொல்லிடாதீங்கன்னு சொல்லிட்டுப் போச்சி...
அப்ப நேத்து நைட்டே "தண்டனை" உறுதியாயிடுச்சா நான்தான் டூ லேட்டா...!?
No comments:
Post a Comment