Tuesday, 27 January 2026

கல்யாணம் ஆனா சரியாயிடும்....


ஒருவன் என்னய பார்த்து சர்க்கரை பொங்கலுக்கு ரசம் ஊற்றி சாப்பிட்டு இருக்கியா என்றான் ! நான் பதறி போய் இல்லைப்பா என்று சொல்ல !

அதற்கு அவன் உனக்கு வயது என்ன என்று கேட்க ! நான் 50 என்று சொல்ல !

அட அம்பது வருஷம் உன் வாழ்க்கையில் முக்கிய்மானத்தை இழந்து விட்டாயே என்று வருத்தப்பட !

அப்பத்தான் நினைத்தான் நெய் மிதக்கும் சர்க்கரை பொங்கல் செய்து அதில் ரசம் மூங்கும் அளவுக்கு பொங்கலை இட்டு அப்படியே எடுத்து வாயில் போட்டா எப்படி இருக்கும் என்று நினைத்தேன் !

ராத்திரி வீட்டுக்கு வந்தேன் ! இரவு பத்து மணி ஆச்சு ! பெண்டாட்டியை எழுப்பி அடியே ஒரு அடுப்பில் சர்க்கரை பொங்கல் வை ! மற்றொரு அடுப்பில் ரசம் வை ! என்று விவரத்தை சொல்ல அவரோ ! என்னங்க வெளியே போகும் போது நல்லாத்தானே போனீங்க ! என்ன ஆச்சு உங்களுக்கு என்று கேட்க !

அதெல்லாம் உனக்கு தெரியாது என்று சொல்லிட்டு !

ஒரு வழியா சர்க்கரை பொங்கலை தட்டில் போட்டு அதில் ரசத்தை தளும்ப தளும்ப ஊற்றி ! ஒரு வாய் எடுத்து விழுங்க வில்லை ! மூக்கருகே வாசம் தான் பிடித்தேன் !

வுவாவ் ! அப்படி ஒரு ஆத்திரம் சட்டியை மாட்டிக்கொண்டு இந்த யோசனை சொன்னவனை தேடி எழுப்பி ! என்னை பார்த்து எப்படி டா இப்படி சொல்ல முடிந்த்தது என்று கேட்க அதற்கு அவன் இல்ல சார் ! உங்க மூஞ்சியை பார்த்தால் நீங்க எதை சொன்னாலும் சாப்பிடுவீங்க என்று தோன்றியது என்றான் பாருங்க !

இது எப்படி இருக்குன்னா சர்க்கரை பொங்கலுக்கு ரசம் ஊத்தி சாப்பிட்டால் நல்லா இருக்குன்னு சொன்னவனும் ! கல்யாணம் ஆனா வாழ்க்கை சிறப்பா இருக்குன்னு சொன்னவனும் ஒன்னு தான் சார் !

அவன் நல்லா இருக்குன்னு எல்லாம் சொல்லலை நமக்கு ஒருத்தன் சொன்னான் ! நாம ரெண்டு பேருக்கு சொல்லுவோம் என்று தான் !

கல்யாணம் ஆகும் போது சொல்லுவான் போக போக சரியா போகும் என்று ஆனா எவனும் சொல்ல மாட்டான் எம்புட்டு தூரம் போனால் சரியா போகும் என்று !

No comments:

Post a Comment