(சீரியசான கதை ஜோக் இல்லை)
ஒரு சிலந்தி வலையில் ஒரு கொசு சிக்கிக்கொண்டது.
கொசுவுக்குத் தெரிந்துவிட்டது தன்னுயிர் போக போகிறது என்று.
எதற்கும் கேட்டுப் பார்க்கலாம் என்று பேச ஆரம்பித்தது.
கொசு: ஓ சிலந்தியே, நீ என்ன வலை விரித்து உட்கார்ந்து இருக்கிறாய் என்னைப் போன்ற அப்பாவிகளை சிறை பிடிக்கிறாய்.
சிலந்தி (சிரிப்பு)
கொசு: பொதுவாக வலைவிரித்து ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் தானே தேட வேண்டும்? தேடிப்பிடிக்க வேண்டும்?
அப்படிப் பார்த்தால் நீ இன்னொரு பெண் சிலந்தியைத் தானே பிடித்திருக்க வேண்டும் என்னை ஏன் பிடித்தாய், நான் ஒரு கொசு. நீயோ சிலந்தி.
சிலந்தி: (கோபத்துடன்) நீ என்ன மனிதனைப்போல பேசுகிறாய் ? நான் என்ன மனிதனா, வலைவிரித்து, துணை தேடிப் பிடிக்க?
கொசு : ஆஹா ன்…, .இவன் எதுக்கு எல்லாம் சரிப்பட்டு வர மாட்டான் போல இருக்கே? (மனசுக்குள்)
அப்படி என்றால் இரை தேடுவதற்காக வலை விரித்து இருக்கிறாயா?
நான் எல்லாம் பறந்து திரிந்து அலைந்து தான் இரை தேடுகிறேன், இப்படி உன்னைப்போல் வீட்டில் இருந்துகொண்டே இரை தேடுவதில்லை.
அதோ கீழே உட்கார்ந்து இருக்கிறானே அவனைப் போல நீ ஒர்க் ஃப்ரம் ஹோம் (WFH)செய்கிறாயா?
சிலந்தி :அவன் ஒண்ணும் வொர்க் ஃப்ரம் ஹோம் செய்யவில்லை. காலையிலிருந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
அவன்தான் நீ சொன்ன மாதிரி வலைவிரித்து வலைத்தளத்தில் துணை தேடிக் கொண்டிருக்கிறான்.
கொசு; நானும் இப்போதுதான் அவனைக் கடித்து விட்டு வந்தேன். வெட்டிப்பயல். சரி என்னை நீ தின்னப் போகிறாயா? என்னை விட்டு விடேன்…
சிலந்தி : முடியாது முடியாது.
கொசு : நீ தனியாக தானே இருக்கிறாய் ஒரு துணை தேடிக் கொள்ளேன். ஒரு பெண் சிலந்தி வந்து மாட்டும் வரை காத்திரு. என்னை விட்டுவிடு. நான் உனக்கு நல்ல வார்த்தை சொல்லி இருக்கிறேனே
சிலந்தி;நீ மனிதர்களைக் கடித்ததால் உனக்கும் அவர்கள் இரத்தம் ஏறி அவர்கள் புத்தி வந்து விட்டது. இப்படி எல்லாம் சிந்திக்கிறாய். நானே ஒரு பெண் சிலந்தியிடம் இருந்து தப்பித்து வந்து இங்கே தனியாக வலை விரித்து உட்கார்ந்து இருக்கிறேன்.
கொசு: நல்லதுக்கே காலம் இல்லை. அதற்கு அந்த மனிதன் கையாலேயே செத்திருக்கலாம். எனக்கு நேரமே சரியில்லை அந்த ஜோதிடரை போய் கடித்து வைக்க வேண்டும். இப்போ என்னை விட்டுவிடு. நாம்தான் நண்பர்கள் ஆகி விட்டோமே?
இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டே கீழே லேப்டாப் பார்த்துக் கொண்டிருந்தவன் மனம் மாறியது. சிலந்தியின் பேச்சு சிந்தனையைத் தூண்டியது.
உடனே மேட்ரிமோனி ஐடி ஓபன் செய்து, தப்புத்தப்பாக தன்னைப் பற்றிய ஆஹா ஓஹோவென்று தகவல் கொடுத்து வைத்திருந்ததை எல்லாம் மாற்றி உண்மைகளாக எழுதி வைத்தான்.
அப்புறம் என்ன?
அடுத்த நாளே நல்ல பெண் கிடைத்து விட்டது.
சுபம்.
இதுபோன்ற நீதிக்கதைகளை எழுதினால் மனிதன் திருந்த வாய்ப்பு உள்ளது..
ஏதோ தெரியாம எழுதி…சரி சரி ..உணர்ச்சிவசப்படாதீர்கள்.
எல்லாம் வலைத்தளம் படுத்தும் பாடு. சிலந்தி வலை)
நீதி: வலை வீசி இரை பிடிக்கலாம். வாழ்க்கைத்துணை பிடிக்க முடியாது
No comments:
Post a Comment