Friday 1 June 2012

சூரத்

Surat  Diamond


இந்த தடவை குஜராத்  சூரத்ல மூணு நாள் தங்கியிருந்தேன்..

வருசத்துக்கு 50000  கோடி ரூபாய்க்கு துணி, வைரம் பிசினஸ் இங்க  நடக்குது..
உலகத்துல வெட்டி எடுக்குற வைரக்கற்களை பட்டை தீட்டுற வேலை 80 % சூரத்துலதான் நடக்குது.. நாள் ஒண்ணுக்கு ஆறு கோடி மீட்டர் துணி இங்க உற்பத்திப் பண்ணப்படுது. இந்த செய்தியெல்லாம் தங்கியிருந்த ஹோட்டல்ல இருந்த புக்ல படிச்சேன்..

அல்போன்சா மாம்பழம் சூரத்தை சுத்தியுள்ள இடங்கள்ள நெறையா விளையுது..!

இந்தியாவுல ரொம்ப சுத்தமான நகர்ன்னு  சூரத் பேர் வாங்கியிருக்கு..!

Old  Bombay Market

ஹசீராங்கிற இடத்துல நாங்க மீட்டிங் வந்ததால பேருக்குத்தான் சூரத்துல தங்கியிருந்தோம்அல்போன்சா சாப்பிடக்கூட  வாய்ப்பே கிடைக்கல.  இருந்தாலும் குஜராத் மீல்ஸ் சாப்பிடும்போது மாம்பழச்சாறு குடிக்க
கொடுத்துக்கிட்டே இருந்தாங்க..!

கடைசி நாள் இங்க இருக்குற 30000  ஜவுளி கடைகள்ல ஒரு கடையில நுழைஞ்சு மாலாவுக்கு சுடிதார் மெட்டீரியல் வாங்கி இந்த ட்ரிப்பை ரொம்ப safe  முடிச்சேன்!

2 comments:

  1. இத்தோட மாலாவின் சுடிதார் எண்ணிக்கையும் 30000?? :))

    Welcome Back!!

    ReplyDelete
  2. ...Took me back to "Happy Months in Surat". Did consultancy(?) at both Reliance & Essar at Hazira. btw, at that times it was the most dirty city...yes, delicious food and dress-shopping

    ReplyDelete