Saturday 23 June 2012

MATHEMAGICS


The Kaprekar Number 


தனியான நான்கு எண்களை எடுத்துக் கொள்ளுங்கள்.அந்த நான்கு எண்களை உபயோகித்து வரும் பெரிய எண்ணை எழுதிக் கொள்ளுங்கள் .பின் அதே நான்கு எண்களை உபயோகித்து வரும் சிறிய எண்ணையும் குறித்துக் கொள்ளுங்கள்.பெரிய எண்ணிலிருந்து சிறிய எண்ணைக் கழியுங்கள்.வருகிற விடையில் உள்ள நான்கு எண்களை உபயோகித்து பெரிய எண்,சிறிய எண் கண்டுபிடித்துப் பின் கழியுங்கள்.இதே போலத் தொடர்ந்து செய்தால் ஒரு முறை   6174         என்ற எண் வரும் எந்த நான்கு எண்களை எடுத்துக் கொண்டாலும் இதே போல ஒரு   நிலையில் 6174     என்ற எண் வரும் இந்த எண்ணை காப்ரேகர் எண் என்று சொல்கிறார்கள்.

உதாரணம் -


எடுத்துக்  கொண்ட  எண்கள்;8,7,9,6
இந்த நான்கு எண்களை உபயோகித்து வரும் பெரிய எண்;9876
சிறிய எண்;6789
வித்தியாசம்;3087
மீதியில் வரும் நான்கு எண்கள்;. 3,0,8,7
இந்த நான்கு எண்களை உபயோகித்து வரும் பெரிய எண்;8730
சிறிய எண்;  0378
வித்தியாசம்;8352
8,3,5,2,
இவற்றின் பெரிய எண்;8532
சிறிய எண்;2358
வித்தியாசம்;6174
ஒரு  சில  எண்களுக்கு ஒரே  முறையிலும் ,வேறு  சில  எண்களுக்கு  நான்கைந்து  தடவைகளுக்குப்  பின்னும்  இந்த  6174  என்ற  எண்  வரும் .



MATHEMAGICS



62 - 52 = 11
562 - 452 = 11 11
5562 - 4452 = 11 11 11
55562 - 44452 = 11 11 11 11
.......and so on







4 + 9 + 1 +3  = 17
4913  = 173





13 + 53 + 33 = 153 





ஒரு புதிர். 1. 1 லிருந்து 10க்குள் ஒரு எண்னை நினைத்துக் கொள்ளுங்கள்.

2. அதை 9 ஆல் பெருக்குங்கள்.

3. வந்த விடையிலிருந்து 5 ஐக் கழியுங்கள்.

4. அந்த எண்ணின் இலக்கங்களைக் கூட்டி ஒற்றை இலக்க எண்ணாக மாற்றிக் கொள்ளுங்கள்.

5. அதற்குப் பொருத்தமான ஆங்கில எழுத்தைக் கண்டுபிடியுங்கள்
A=1, B=2,C=3, D=4, என்பது போல.

6. அந்த ஆங்கில எழுத்தில் தொடங்கும் ஒரு நாட்டை நினைத்துக் கொள்ளுங்கள்.

7. அந்த நாட்டின் பெயரில் உள்ள ஆங்கில இரண்டாவது எழுத்தில் தொடங்கும் ஒரு மிருகத்தை நினைத்துக்கொள்ளுங்கள்.


இப்போது, நீங்கள் நினைத்த நாடு டென்மார்க்.

நினைத்த மிருகம் யானை தானே? 
பெரும்பாலான பேர் நினைத்துக் கொள்வது இவைதாம்.



No comments:

Post a Comment