Saturday 2 June 2012

கூந்தல்



மாலாவோட கூந்தல் பத்தி படிச்ச என்னோட ஃபிரெண்டு அந்த காலத்துல பெண்களோட கூந்தலை எப்படி எல்லாம் உவமைப் படுத்தியிருக்கங்கன்னு 

ஒரு தமிழ்ப் பாடல் அனுப்பியிருக்காரு.. 

 இந்த பாடலை இயற்றியவர்
தவத்திரு தண்டபாணி சுவாமிகள்

கார்மணல் ஓட்டமும், பாசிக் கொத்தும்,
மேகமும், இருளும், விரிமலர்ச் சோலையும்,
வண்டுக் கூட்டமும், மற்று ஓர் விதப் பனை
காய்த்து உள கொத்தும் கரும் குழலுக்கு இணை; அது
பின்உறில் கொன்றைக் காய் எனப் பிறங்கும்,
அவிழ்ப்பு உறில் அகத்திக் காய்க் கொத்து அனையதாம்

பெண்களின் கரும் கூந்தலுக்கு எதையெல்லாம் உவமையாகச் சொல்லலாம்?

·         ஆற்று ஓரத்தில் படிந்துள்ள கருப்பு மணல்
·         கடல் பாசிக் கொத்து
·         மேகம்
·         இருள்
·         மலர்கள் நிறைந்த சோலை
·         வண்டுக் கூட்டம்
·         ஒரு வகைப் பனையின் கொத்தான காய்கள்
·         அந்தக் கூந்தல் பின்னிவிடப்பட்டால், கொன்றைக் காய்போல் இருக்கும்
·         பின்னாமல் அவிழ்த்துவிடப்பட்டால், அகத்திக் காய்க் கொத்துபோல் இருக்கும்



எனக்கு இந்த உவமைகள்   ஒண்ணு கூட பிடிக்கல..! 





2 comments:

  1. எனக்கு ஒண்ணு கூட புரியலே.... :)

    ReplyDelete
  2. கொன்றைக் காய் - no idea what this looks like;
    அகத்திக் காய்க் கொத்து - same her.
    need pictures JP :))

    ReplyDelete