Monday 18 June 2012

சிம்பிள் சிகிச்சை


நேற்று BHEL  அறிவுத் திருக்கோவிலில் சிறப்பு நிகழ்ச்சியாக ஹீலர் பாஸ்கர் என்பவரின் செவிவழி தோடு சிகிச்சை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுமார் 500 அன்பர்கள் கலந்து கொண்டனர். எல்லாவித நோய்களுக்கும் உணவு சாப்பிடும் முறையில் சிறு மாற்றம் செய்து எந்த உணவினையும் சாப்பிடலாம் என்பதை ஆறு மணி நேரம் விளக்கினார்.

இந்த சிகிச்சையில் எந்த மருந்து, மாத்திரை, ஊசி, தியானம், யோகா, மூச்சுபயிற்சி, உடற்பயிற்சி, அக்குபஞ்சர், ரெய்க்கி, நாடிபார்த்தல், பத்தியம் கிடையாது.

 நமது உடலில் உள்ள ஒரு சுரப்பியை நாமே சுரக்க வைத்து நமது நோய்களை நமக்கு நாமே குணப்படுத்தி கொள்ளும் முறைக்கு அனடாமிக் தெரபி, செவிவலி தொடு சிகிச்சை என்று பெயர்.

உப்பு, புளி, காரம், குறைக்க தேவையில்லை, பத்தியமும் இல்லை, வாக்கிங் தேவை இல்லை.

சக்கரை மற்றும் அனைத்து நோயாளிகளும் சிகிச்சை முடிந்த அடுத்த வினாடி முதல் எல்லா இனிப்புகள், பழங்கள், எண்ணெய் பலகாரங்கள், மனதுக்கு பிடித்த எல்லா உணவுகளையும் வாழ்க்கை முழுவதும் தாராளாமாக சாப்பிடலாம்.

இந்த சிகிச்சை எந்த மதமும் சம்பந்தப்பட்டது அல்ல. எனவே எல்லா மதத்தினருக்கும் பொருந்தும்.

கேள்வி பதில் பகுதியில் மக்கள் கேட்ட கேள்விகளை எண்ணும்போது ஆரோக்கிய குறைவால் மக்கள் எப்படியெல்லாம் கஷ்டப் படுகின்றார்கள், எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பது கொஞ்சம் அதிர்ச்சியைத் தந்தது.

ஹீலர் பாஸ்கரின் சொற்பொழிவு மற்றும் விவரங்கள் அவருடைய website ல் இருக்கிறது -


http://anatomictherapy.org/

No comments:

Post a Comment