நண்பர்களை பற்றி :கண்ணதாசன்
அர்த்தமுள்ள இந்து மதத்தில் கண்ணதாசன் இன்றைய நண்பர்கள் பற்றி எளிமையாக சொல்லியிருப்பார், அதாவது பனைமரம், தென்னைமரம், வாழைமரம் .
பனைமரம் :
தானாக முளைத்து, தனக்கு கிடைத்த நீரை
குடித்து தன்உடம்பையும், ஓலையையும் மற்றும் நுங்கையும் உலகத்திற்கு
தருகிறது நம்மிடம் எந்த உதவியும் கேட்காமல் உதவுபவன் பனைமரம் போன்றநண்பன்.
தென்னைமரம்:
தென்னை நம்மால் நடப்பட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்தால் பலன் தருகிறது. அதுபோல நிமிடம் உதவி பெற்று நண்பனாக இருப்பவன் தென்னை மரத்துக்கு இணையானவன்.
வாழைமரம் :
தினமும் தண்ணீர் ஊற்றினால் தான் பலன்தரும்.
அதுபோல நம்மிடம் தினமும் உதவி பெற்று வாழ்பவன் வாழைமரம் போன்றவன். இந்த
மூவரில் பனைமரம் போன்றவனை தேர்ந்தெடுக்க வேண்டும் இது ஒரு பாடலின் வரிகள்
என்கிறார் கண்ணதாசன்.
நண்பர்களில் நூற்றுக்கு ஒருவர், இருவர்
தான் அப்படி கிடைத்தனர் . மற்றவர்கள் பணம் பறிக்க என்னிடம் இருந்தனர்
இப்போது அவர்கள் கோழி மேய்க்கின்றனர் என கண்ணதாசன் குறிப்பிடுகிறார்.
நமது வாழ்விலும் இம்மூன்று வகையானவர்களை பார்க்கின்றோம்.
No comments:
Post a Comment