Tuesday, 20 May 2014

நட்பு....12

முன்னோர் காலத்தில் நட்பு

பாரத கதையில் தான் செஞ்சோற்று கடனை அடைக்க சகோதரர்களுக்கெதிராக நண்பன் தீய செயல் புரிபவனாக இருந்தாலும் இறுதிவரை அவனுடனிருந்து உயிர் விட்ட கர்ணன் .

பார்க்காமல் நட்பு

சங்க காலத்தில் கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு இதைவிட வேறு சரியான உதாரணம் இல்லை .கோப்பெருஞ்சோழன் பற்றி கேள்விப்பட்டு பிசிராந்தையர் என்ற புலவர் அவன்மீது நட்பு கொண்டார் சோழ மன்னனும் புலவர் பற்றி அறிந்து இருவரும் பார்க்காமலே நட்பு கொண்டனர் . சில ஆண்டுகள் கழித்து சோழன் வடக்கிருக்க ( சாப்பிடாமல் இறைவனை நினைத்து உயிர் துறப்பது ) முடிவு செய்தான்.

இதனை அறிந்து அவனுடன் மேலும் சிலர் வடகிருக்க முடிவு செய்தனர் . சோழன் புலவருக்காக இடம் அங்கு ஒதுக்கினான் அது போல புலவரும் அங்கு வந்து சேர்ந்தார். தமிழர்களின் வாழ்வில் நட்பு என்பது வாழ்வில் கலந்துவிட்ட ஒன்று இப்போதுபோல நண்பர்கள் தினம் என்று தனியாக இல்லை.

நமக்கு நல்ல நண்பர்களை கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்லி , நம் நண்பர்களுடன் நேரிலோ தொலை பேசியிலோ நம் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

சில கருத்து வேறுபாடுகளால் நம்மை விட்டு பிரிந்து போன நண்பர்களுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு, அவற்றை மறந்துவிட்டு சிறிய நினைவு பரிசு கொடுத்து அவர்களுடன் மீண்டும் நட்பை புதுப்பிக்கும் நாளாக கொண்டாடலாம் .

No comments:

Post a Comment