ஹை-பாயின்ட் பல்கலைக்கழகம்.
அகால நேரத்தில், கொதி நீர் ஊற்றிக் குடிக்கும் நூடுல் சூப், கேம்பஸ்களுக்கே உரித்தான மிகவும் பிளெயின் பில்டிங்குகள், கேம்பஸூக்கு வெளியே எப்போதாவது போகக்கூடிய சினிமா தியேட்டர்? அழுதுவடியும் பப்?
மேலே குறிப்பிட்டவைதான், பல்கலைக்கழகம் பற்றிய உங்களது பிம்பமாக இருந்தால், உங்களுக்கு மற்றொரு ‘டைப்’ பல்கலைக்கழகத்தை காட்ட விரும்புகிறோம். இந்த பல்கலைக்கழகம் அமைந்திருப்பது, அமெரிக்கா, நார்த் கரோலைனாவில்
இதுதான், ஹை-பாயின்ட் பல்கலைக்கழகம். ‘மற்றொரு டைப்’ பல்கலைக்கழகம் என்றோமே.. அது என்ன டைப்?
டிஸ்னி வேர்ள்ட் போலவும் உள்ளது, ஐந்து நட்சத்திர ஹோட்டல் போலவும் உள்ளது, ஹாலிவூட் சினிமா செட் போலவும் உள்ளது.
பரீட்சைக்கு படித்த களைப்பா? ஆடம்பர ஸ்விம்மிங் பூல், குளிர்மை தர காத்திருக்கிறது! பசிக்கிறதா? ஐந்து நட்சத்திர ஹோட்டலில் உள்ளது போன்ற ரெஸ்ட்டாரென்ட்டில் 5 கோர்ஸ் உணவு தயார். சினிமா பார்க்க வேண்டுமா? உள்ளேயே தியேட்டர் உள்ளது. புதிய திரைப்படங்களும் ரிலீஸ் ஆகின்றன.
தியேட்டரில் டிக்கெட் கட்டணம் கிடையாது. அட, அத்தோடு விட்டார்களா?
மாணவர்களுக்கு இலவச சினிமா பார்க்க, இலவச பாப்கார்ன், ஸ்வீட், மென்பானம் எல்லாமே இலவசம்! அத்துடன் கேம்பஸ் வளாகத்துக்குள் ஐஸ்கிரீம் ட்ரக் ஒன்றும் சுற்றி வருகிறது. இலவச ஐஸ்கிரீம்!
என்னங்க இது, நெசமா? என்று கையை கிள்ளிப் பார்க்காதீர்கள், ஹை-பாயின்ட் பல்கலைக்கழக நிர்வாகம் இப்போது யாருடைய கையில் உள்ளது என்று பாருங்கள்.
உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான டாக்டர் நிடோ க்யுபென், சமீபத்தில் வாங்கியுள்ள பல்கலைக்கழகம் இது. சுமார் 700 மில்லியன் டாலர் செலவில் எல்லாவற்றையும் மீள பளபளப்பாக அமைத்திருக்கிறார். இனி தாம் பணத்தை தேடி ஓடப் போவதில்லை எனவும், இந்த பல்கலைக்கழகமே தமது வாழ்க்கை என்றும் சொல்லியிருக்கிறார் அவர்.
ஜோர்தானில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய இந்த கோடீஸ்வரர், தமது பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு செய்து கொடுத்துள்ள வசதிகளை, பாருங்களேன்.. மலைக்காதீர்கள்,
No comments:
Post a Comment